தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தவெக சார்பில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் விழா பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது.

தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று கொண்டாடப்படும் என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும்  வரும் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று காலை 10.30 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு தனது கட்சி நிர்வாகிகளோடு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தவெக சார்பில் நடைபெறவுள்ள இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் உள்ள தவெக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக தவெக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் சுமார் 1500 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் க்யூ.ஆர்.குறியீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்