அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

அணுசக்தி துறையில் தனி​யார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது.

அணுசக்தி துறை மத்​திய அரசின் முழு கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. நாட்​டில் அணு மின்​சார உற்​பத்​தியை அதி​கரிக்​கும் நோக்​கில், இத்​துறையில் தனி​யாருக்கு அனுமதி வழங்க மத்​திய அரசு முடிவு செய்​து உள்​ளது.

நாம் 2047-ம் ஆண்​டுக்​குள் 100 ஜிகா வாட் அணு மின்​சக்தி உற்​பத்தி என்ற இலக்கை எட்ட வேண்​டும். அதற்​கு, இப்​போது கொண்​டு​வரப்​படும் அணுசக்தி மசோதா உதவும்.

நாட்​டில் அதி​கரித்து வரும் எரிசக்தி தேவை​களுக்கு தீர்வு காண​வும், மொத்த எரிசக்​தி​யில், அணு மின்​சா​ரத்​தின் பங்கை 10 சதவீத​மாக அதி​கரிக்​க​வும் இந்த மசோதா அவசி​யம்.இவ்​வாறு அமைச்​சர் ஜிதேந்​திர சிங் பேசி​னார்.

இந்த மசோ​தாவை எதிர்த்து காங்​கிரஸ் எம்​.பி மணீஷ் திவாரி பேசுகையில், ‘‘இந்த மசோ​தா​வில் அணுசக்தி சாதனங்​களை விநி​யோகிக்​கும் நிறு​வனங்​களின் பொறுப்பை நீக்​கும் பிரிவு உள்​ளது. இந்​தப் பிரிவு, அணு உலை விபத்து ஏற்​பட்​டால் இந்​தி​யா​வுக்கு பாதக​மாக அமை​யும். கதிர்​வீச்சு கழி​வு​களை கையாள்​வது, யுரேனி​யம் அணு உலைகளுக்கு முன்​னுரிமை அளிப்​பது போன்ற திட்​டங்​கள் எது​வும் இந்த மசோ​தா​வில்​ இல்​லை’’ என்றார். இதையடுத்து இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.​