வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் - கேட்டை திறந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!
புத்தாண்டை ஒட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
2025 விடைபெற்று 2026-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில், உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகை இரவுமுதல் களைகட்டியது. குறிப்பாக பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் 2026 ஆம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்தும் அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போது, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தால் அவரது ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். சில சமயங்களில் வெளியூர் படப்பிடிப்பு அல்லது உடல்நலக்குறைவு காரணமாக அவர் ரசிகர்களை சந்திக்காமல் இருந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வர்.
அதைத் தொடர்ந்து, "பேட்டி எதாவது கொடுக்கிறீர்களா?" என செய்தியாளர்கள் கேட்டபோது, “வேண்டாம், உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என தெரிவித்து விட்டு வீட்டிற்குள் சென்றார். புத்தாண்டை முன்னிட்டு ரஜினியை கண்ட அவரது ரசிகர்கள் அனைவரும், அங்கிருந்து பூரிப்புடன் கலைந்து சென்றனர்.