திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள்: யோகி பாபு நெகிழ்ச்சி

திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள்: யோகி பாபு நெகிழ்ச்சி

திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு யோகி பாபு நெகிழ்ச்சியுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான படம் ‘யோகி’. இப்படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டவர் யோகி பாபு. தற்போது திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்தவர் யோகி பாபு. தற்போது நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகர் என்றால் அது யோகி பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.