என்கவுன்ட்டர்: 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுக்மாவின் தெற்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, இருதரப்புக்கும் சண்டை வெடித்தது. இதில் 12 மாவோயிஸ்டுகள் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து பலியாகினர்.
பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து மேலும் தகவல் கிடைக்கவில்லை.