குற்ற உணர்ச்சி  சிறிதும் இல்லாத விஜய்...! பத்திரிகையாளர் திருஞானம் சாடல்.!

குற்ற உணர்ச்சி  சிறிதும் இல்லாத விஜய்...! பத்திரிகையாளர் திருஞானம் சாடல்.!

"மனிதாபிமானம் துளியும் இல்லாத 
விஜய் திருந்த மாட்டார்.. 
தமிழ்நாட்டு இளைஞர்களை 
குட்டிச்சுவராக்காமல் விடமாட்டார்"
என்று புன்னகை ஆசிரியர் 
பத்திரிகையாளர் திருஞானம் 
X தளத்தில் பதிவிட்டுள்ளார். 
அதில் அவர் கூறியிருதாவது :  

--------

தான் கரூர் கூட்டத்தில் 
பேசும்போதே 
பலரும் மயங்கி விழுந்ததையும் 
மரணம் அடைந்ததையும் 
நேரில் பார்த்தபோதும், 
துளிக்கூட மனிதாபிமானம் இல்லாமல் 
சொகுசு காரிலும் 
சொகுசு விமானத்திலும் 
விஜய்
தப்பித்து ஓடியது என்பது 
கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  

உலகத்தில் எந்த ஒரு 
கட்சித் தலைவனும் இப்படி  
மனச்சாட்சி செத்துப் போனவனாக
இருக்க மாட்டான் .

கேள்விகேட்ட  
ஊடகங்களிடம் 
வருத்தம் கூட தெரிவிக்காமல் 
திமிருடன் ஓடிப்போன விஜய் 
3 நாட்களுக்குப்பின் 
வாய் திறந்திருக்கிறார். 
Recorded Video போட்டிருக்கிறார்.

தான் 7 மணி நேரம் 
தாமதமாக வந்து 
துயர சம்பவத்தை 
தொடங்கி வைத்ததற்கு 
மக்களிடம் மன்னிப்பு கேட்க 
மறுக்கிறார் விஜய்.. 

கூட்ட நிர்வாக அறிவோ திறனோ 
இல்லாத கூமுட்டைகளை 
கூடவைத்துக்கொண்டு 
மொத்தப் பழியையும் 
மற்றவர்கள் மேல் சுமத்தி
தப்பிக்கப்பார்கிறார். 

என்னை கைது செய் 
என சினிமா டயலாக் பேசுகிறார்

மதுரை கூட்டத்தில் 
தனது தொண்டனை 
தனது கண் முன்னே 
பவுன்சர் ஒருவன் 
ரேம்ப் பிலிருந்து தூக்கி வீசியதை 
சலனமின்றிப் பார்த்தவர்தான்   
இந்த மனிதர்..! 

அந்தத் தொண்டன் 
கட்டையைப்பிடிக்கத் தவறி இருந்தால், 
விஜய் கண்முன்பாகவே 
அசம்பாவிதம் நடந்திருக்கும்.

மனித உயிர்களை 
...க்குச் சமமாக மதிக்கும் 
இந்த மனிதர் எல்லாம் 
அதிகாரத்தில் அமர்ந்தால்
என்ன நடக்கும்..!?

இந்த ஆள் திருந்த மாட்டார்.. 
தமிழ்நாட்டு இளைஞர்களை 
குட்டிச்சுவராக்காமல் விடமாட்டார். 

மதவெறி எப்படி 
மனிதர்களை 
சிந்திக்கவிடாமல் செய்கிறதோ 
அதேபோன்ற நஞ்சுதான் 
சினிமாப் பைத்தியம். 

நம் இளைஞர்களை 
சினிமாப் பைத்தியத்தில் இருந்து 
மீட்டெடுக்க வேண்டியது 
அவசிய கடமை. 
அவசர கடமை.