சென்செக்ஸ் 780 புள்ளி சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 780 புள்ளி சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தை சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு  ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் சரிவில் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் (சென்செக்ஸ்) 780 புள்ளிகள் சரிந்து 84,180-ல் நிறைவடைந்தது. இதுபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் (நிப்டி) 264 புள்ளிகள் சரிந்து 25,877-ல் நிறைவடைந்தது.

இந்தியா உட்பட ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வகை செய்யும் செனட் உறுப்பினரின் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதையடுத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் பங்குகளை விற்றனர்.சர்வதேச அளவில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், அந்நிய மூலதன வெளியேற்றம் மற்றும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு வருவாய் முடிவுகளுக்கு முன்னதாக நிலவும் எச்சரிக்கை உணர்வு போன்றவையே பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.