பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் தன்வி சர்மா

பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் தன்வி சர்மா

உலக ஜூனியர் பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் குவாஹாட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 16 வயதான இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, ஜப்​பானின் சகி மட்​சுமோடோவுடன் மோதி​னார்.

இந்த ஆட்​டத்​தில் தன்வி சர்மா 13-15, 15-9, 15-10 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் அவர், குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளார். இதன் மூலம் உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 17 ஆண்டுகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைக்க உள்ளார் தன்வி சர்மா.

மற்​றொரு கால் இறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் உன்னதி ஹூடா 12-15, 13-15 என்ற நேர் செட் கணக்​கில் தாய்​லாந்​தின் அன்​யாபட் பிச்​சிட்ஃ​போனிடம் தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 32 நிமிடங்​களில் முடிவடைந்​தது. கலப்பு இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் பவ்யா சாப்​ரா, விசாகா டோப்போ ஜோடி 9-15, 7-15 என்ற செட் கணக்​கில் சீன தைபே​வின் ஹங் பிங் ஃபூ, சோ யுன் ஜோடி​யிடம் தோல்​வி அடைந்​தது.