மருமகனுக்கு 159 விதவிதமான உணவு... மெகா விருந்து வைத்த மாமியார்..!

மருமகனுக்கு 159 விதவிதமான உணவு... மெகா விருந்து வைத்த மாமியார்..!
சங்கராந்தி பண்டிகையை கொண்டாட வந்த மருமகனுக்கு 159 வகை உணவு கொண்டு மாமியார் விருந்தளித்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதட்டா என்ற இளைஞர் சங்கராந்தி பண்டிகையை கொண்டாட குண்டூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், சங்கராந்தி விருந்துக்கு பெயர் போன ஆந்திராவில் ஸ்ரீதட்டாவுக்கு 159 வகை உணவுகளை தயாரித்து கொடுத்து மாமியார் அசரச் செய்துள்ளார்.
இந்த வகை வகையான உணவுகளை கண்டு ஸ்ரீதட்டா மிரண்டு போன வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.