"14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

"14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV என்ற புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சார்பில் சைதை தொகுதிக்குட்பட்ட 100 இளம் பெண்களுக்கு ரூ. 50,000 வரை அதிகபட்ச முதிர்வுத் தொகை மற்றும் தென்சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தகுதி வாய்ந்த 100 குடும்பங்களை சேர்ந்த 200 பெண் குழந்தைகளுக்கு ரூ 25,000 அரசு சேமிப்பு பத்திரங்கள் வழங்கும் விழா அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பயனாளிகளுக்கு உரிய தொகையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் சிசு கொலை தடுப்பு உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு வந்துள்ளது. ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50 ஆயிரம் குழந்தை பெயரில் பதிவு செய்யப்படும்.

இரு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ. 50 ஆயிரம் பதிவு செய்ய வேண்டும். இவை குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும்” என்றார்.