டிச.5-ம் தேதி வெளியாகிறது ‘வா வாத்தியார்’

டிச.5-ம் தேதி வெளியாகிறது ‘வா வாத்தியார்’

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வா வாத்தியார்’. நீண்ட நாட்களாக இப்படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உல்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. கார்த்தியின் காட்சிகள் முடிக்கப்பட்டாலும், இதர நடிகர்களுக்கு இன்னும் படமாக்க வேண்டிய காட்சிகள் இருக்கின்றன.

அனைத்தையும் முடித்து டிசம்பர் 5-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு களமிறங்கியிருக்கிறது. மேலும், ’கங்குவா’ படத்தின் தோல்வியால் ஏற்பட்ட சிக்கலில் இப்படம் வெளியாகுமா என்ற சூழல் நிலவியது. தற்போது அனைத்தும் சரிசெய்யப்பட்டு டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘வா வாத்தியார்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்தார் 2’ அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.