“ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க வாய்ப்பு.. ஆனால்..” - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்

“ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க வாய்ப்பு.. ஆனால்..” - லோகேஷ் கனகராஜ் ஓப்பன் டாக்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூலி திரைப்படத்திற்கு பிறகு ஊடகங்களை பெரிதாக சந்திக்க முடியவில்லை. அடுத்த படத்திற்கான பணிகளுக்கு முன்பாக, என்னை பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வந்துள்ளது. அதை பற்றி பேச உள்ளேன். முதலில் ‘கூலி’ திரைப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.
’கூலி’ திரைப்படத்தில் வந்த எதிர்மறை கருத்துகள் மூலம் எதிர்மறை கருத்துகள் இல்லாமல் படம் எடுப்பேன். கூலி வெளியான பின்பு ரஜினி கமல் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இருவருக்கும் தனியாக சென்று கதை சொன்னேன். தொடர்ந்து ஆக்ஷன் படத்தை இருவரும் செய்து வந்தார்கள். அதனால் அவர்கள் வேறு ஒரு யதார்த்தமான படத்தை யோசித்தார்கள். எனக்கும் கைதி இரண்டாம் பாகம் இருந்தது.
ஆனால் அதற்குள் கார்த்தி வேறு படத்திற்கு தேதி கொடுத்து விட்டார். அந்த இடைவெளியில் அல்லு அர்ஜூனா திரைப்படத்தை இயக்க உள்ளேன். அதற்கு அடுத்த படம் கைதி 2 தான். அதற்கு அடுத்து அமீர்
கூலி படத்திற்கு 35 இடத்திற்கு தணிக்கை குழுவினர் கட் கொடுத்தார்கள். தயாரிப்பு நிறுவனத்தின் உடன் பேசி அனைவரும் உடனே மீண்டும் ரீ சென்சார் அனுப்பினோம். அப்போதும் 35 கட் செய்தார்கள். முழுமையான படமாக இருக்க வேண்டும் என ‘ஏ’ சென்சார் சான்றிதழுக்கு ஒப்புக்கொண்டோம். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் பிரச்சனை குறித்து அண்ணன் வினோத் இடம் கேட்க வேண்டும்.
எனது படங்களில் வெட்டு குத்து அதிகமாக உள்ளது, என்றால் நான் அது போன்ற படத்தை பார்த்து வளர்ந்தவன். தேவர் மகன் விருமாண்டி உள்ளிட்ட படங்களை பார்த்து வளர்ந்தவன் நான், அது போல் படம் எடுக்கும் போது எனக்கு பொறுப்பு இருக்க வேண்டும் என்றால், அதை பார்க்கும் மக்களுக்கும் பொறுப்பும் உள்ளது.
போதை பொருட்களின் காட்சிகள் என் படத்தில் அதிகமாக இருக்கிறது என்ற கருத்து அதிகமாக உள்ளது. அதற்கு நான் விளக்கம் கொடுக்க வேண்டும். என் படங்களின் போது இந்த போதை பொருட்கள் எடுத்து கொண்டால், இப்படி ஆகலாம் என எங்கேயும் கூறவில்லை. நான் இயக்கும் படத்தில் உள்ள நடிகர் மூலம் போதை பொருட்களுக்கு எதிராக சொல்லும் போது, அது அதிக மக்களுக்கு சென்று சேரும். நாங்கள், போதை பொருட்களுக்கு எதிராக கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நான் அது போன்று படங்கள் செய்வதை நிறுத்தி விட்டால் இங்கே எல்லாமே மாறிவிடும் என்றால் நான் என் படத்தில் அப்படி எதையும் காட்டமாட்டேன்” என்றார்.