ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 6 - 2026 செவ்வாய்க்கிழமை.

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 6 - 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: கன்ஸ்ட்ரக்ஷன் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள்.

பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.

கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது.

மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள்.

திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

புனர்பூசம்: சக ஊழியர்களிடம் கடுமை காட்டாதீர்கள்.

பூசம்: புதிய முதலீடுகளால் அதிகப்படியான லாபம் பெறுவீர்கள்.

ஆயில்யம்: ஈகோவை விட்டொழியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகம்: ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் செலவு அதிகரிக்கும்.

பூரம்: நில விற்பனையில் தடையாக இருந்த சிக்கல் நீங்கும்.

உத்திரம்: வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்க தாமதமாகும்.

அஸ்தம்: வியாபாரத்தில் எண்ணியதை விட நல்ல லாபம் கிடைக்கும்.

சித்திரை: பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாகி மனம் சலிக்கும்.

சுவாதி: நோய் சிறியது என்று அலட்சியமாக இருக்காதீர்கள். 

விசாகம்: கொடுக்கல் வாங்கல் அனைத்தும் எழுத்து மூலம் நடக்கட்டும்.

அனுஷம்: வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

கேட்டை: வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பெற்றோரிடம் பேசுவார்கள்.

மூலம்: அயல்நாடு செல்லும் வாய்ப்பு பற்றிய நல்ல செய்தி கிடைக்கும்.

பூராடம்: மனதுக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்திராடம்:புதிய சொத்துக்கள் வாங்குவது குறித்து திட்டம் தீட்டுவீர்கள் .

திருவோணம்: திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

அவிட்டம்: கட்டுமானத்துறையில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

சதயம்: விரைந்து முடிய வேண்டிய விஷயங்கள் சற்று தாமதப்படும்.

பூரட்டாதி: அதிக அளவில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

உத்திரட்டாதி: சிறிய வியாபாரத்தில் ‌ன அதிக லாபம் அடைவீர்கள்.

ரேவதி: எதிர்பாராத பணவரவு கடனை அடைக்க உதவி செய்யும்.