
பயணம் செய்தால் கால்கள் வீக்கம காரணங்கள் என்ன?
உடலில் ரத்த ஓட்டம் சரியான முறையில் நடைபெறுவதில்லை .
நீங்கள் படுத்திருக்கும்போது அதாவது படுத்த நிலையில் பயணம் செய்யும்போது கால்கள் வீங்குவது இல்லை,
அமர்ந்த நிலையில் பயணம் செய்யும்போது தொடை பின்புறம் அழுத்தம் ஏற்படுவதால் இரத்த ஓட்டம் பாய்வதற்கான வாய்ப்பு குறைவு, ஆகவே கால்களில் வீக்கம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுபோல் நிலைமை ஏற்படலாம்,
ஆனால் அமர்ந்தபடியே செய்யக்கூடிய சில பயிற்சிகளை செய்தால் இந்த நிலையிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
30 நிமிடங்களுக்கு ஒருமுறை பாதங்களை வலப்புறமாகவும் அப்புறம் இடப்புறம் ஆகவும் ஐந்து ஐந்து முறை சுழற்ற வேண்டும்.
கால்களை முன்னும் பின்னும் இடமும் வலமும் லேசாக அசைக்க வேண்டும், முடிந்தால் ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டுகொண்டு அந்த காலை லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
இவற்றை அடிக்கடி 30 அல்லது 40 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்து கொண்டே இருந்தால் உங்களது ரத்த ஓட்டம் தடைபடாது.
சில நேரங்களில் அமர்ந்தபடியே பயணம் செய்துவிட்டு ரயிலிலிருந்து அல்லது பஸ்ஸிலிருந்து இறங்கி நின்ற உடன் கால்கள் தடுமாறும் அதற்கான காரணமும் இதுதான்.
நீண்ட தூர பயணம் செய்பவர்கள் மூட்டு வலியை தவிர்ப்பதற்கு அவ்வப்போது மூட்டில் கை வைத்த வலப்புறமும் இடப்புறமும் மசாஜ் செய்வது போல் சுற்றி விட்டால் அதாவது அழுத்தி சுற்றி விட்டால் மூட்டு வலியும் வராது.
அனைத்திற்கும் காரணம் ரத்த ஓட்டம் தடைபடுதல்.
அதைச் சரி செய்து விட்டால் இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக மீண்டு விடலாம்.
ரயிலில் பயணம் செல்வீர்கள் என்றால் அடிக்கடி எழுந்து ஒரு நடை போய் வாருங்கள் அது இன்னும் நல்ல பயனை தரும்.
Tags:
#Swollen Legs
# கால்கள் வீக்கம்
# Health Tips