.jpg)
அதிமுக – பாஜக கூட்டணி வைத்து ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன் விமர்சனம்
நெருக்கடி கொடுத்து அதிமுகவை கூட்டணிக்கு பணிய வைத்துள்ளது பாஜக என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், “பாஜகவுடன் அதிமுக சேர்ந்ததற்கு பல்வேறு நெருக்கடிகளும் காரணம்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுகவுக்கு பின்னடைவே ஏற்படும்.
பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.