பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி ராகுல் காந்தி தான்! - துரை வைகோ பேச்சு
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 225வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மணிமண்டபத்தில் மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோ , சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்
கால நிலை மாற்றம் காரணமாக பாலைவனத்தில் மழை பெய்யும் நிலை உள்ளது
சுற்றுச் சூழலை அனைவரும் பாதுகாக்க வேண்டும்
தற்போது ஏற்பட்டு வருவது இயற்கை பேரிடர் கிடையாது. அதற்கு மனிதர்கள் தான் காரணம்
குட்டைகள்,, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மக்கள் சாக்கடை தேங்கும் இடமாக மாற்றி விட்டனர்
கால நிலை மாற்றம் மிக மோசமான விளைவுகளை வருங்காலத்தில் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது
காட்டுப் பன்றிகள் தொல்லையினால் தென் மாவட்டங்களில் விவசாயம் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சில மாநிலங்களில் காட்டு பன்றியை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு ஓராண்டுக்கு அனுமதி கொடுத்து போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும்
வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து எடுத்துரைப்பேன். மேலும் தமிழக முதல்வர் மூலமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
போதை பொருள் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது
தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை , தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினர் தொடர்ந்து போராடி வருகிறோம்
மது கடைகளை ஒழிப்பது மக்கள் கையில் உள்ளது
கலிங்கப்பட்டியில் திறக்கப்பட்ட மதுக்கடையை மதிமுக மக்களுடன் போராடி அகற்றியது.
தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன
அருகில் உள்ள மாநிலங்களில் மது விற்பனை இருப்பதால் இங்கு கடத்தி வர வாய்ப்பு உள்ளது. மேலும் கள்ளச்சாராயம் விற்பனையும் அதிகாரிக்க வாய்ப்பு உள்ளது.
இருந்த போதிலும் மது ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை. அதை தொடர்ந்து மதிமுக செய்து கொண்டு இருக்கிறது.சமீபத்தில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.
பிரதமர் மோடிக்கு மாற்று சக்தி என்றால் ராகுல் காந்தி தான் . எல்லோரும் பிரதமர் மோடி ,பாஜக மற்றும் மதவாத சக்திகளை எதிர்க்கிறோம் . ஆனால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைமை என்றால் ராகுல் காந்தி தான். ராகுல் காந்திக்கு மாற்றாக வேறொருவரை கொண்டு வருவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று பார்க்கிறேன் இண்டியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது.பிரதமர் வேட்பாளர் என்றால் அதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான் என்றார்.
Tags:
#ராகுல் காந்தி
# பிரதமர் மோடி
# துரை வைகோ
#