
நாளை தமிழ் வருடப்பிறப்பு எப்படி வழிபட்டால் செலவம் பெருகும் வாங்க பார்க்கலாம்..!
பிறக்க போகும் தமிழ் புத்தாண்டு அன்று காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் வழிபாடு செய்யும் முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம்.
2025 ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் கனி காண்பது மிகவும் சிறப்புக்குரியது. தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர்கள் சில வழி முறைகளை கடைபிடித்து வைத்துள்ளனர்.
முதல் நாள் இரவே ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைக்க வேண்டும். இவைகள் கண்டிப்பாக வைக்க வேண்டும். இது தவிர வேறு பழங்களும் வைக்கலாம். அதோடு கண்டிப்பாக ஒரு எலுமிச்சை பழம் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு வைத்து, வீட்டில் இருக்கும் தங்க நகை ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.ரூபாய் நோட்டு கட்டு இருந்தால் வைக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டு அல்லது சில்லறை காசுகள் வைக்கலாம். இதற்கு முன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைத்து விட வேண்டும்.
புத்தாண்டு அன்று காலையில் எழுந்து, கண் விழிக்கும் முன் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தட்டில் வைத்துள்ள பழங்கள், பணம், நகை ஆகியவற்றை தான் முதலில் பார்க்க வேண்டும். பிறகு கண்ணாடியில் அவரவர்களின் முகத்தை பார்த்து விட்டு, மகாலட்சுமியை நினைத்து, தட்டை தொட்டு வணங்கி விட்டு, அன்றாட வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்வதனால் வரப்போகும் வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும் என்றும் செல்வம் பெருகும் என்றும் கோவில் குருக்களால் சொல்லப்படுகிறது.