
கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?
சமையல் பயன்பாடுகளை தவிர கறிவேப்பிலை சில ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சிமற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இந்த இயற்கையான இலையில் நிறைந்துள்ளன.
நம்மை சுற்றி இயற்கையாக கிடைக்கும் பல பொருட்களினால் கிடைக்கும் பலன்களை முழுமையாக்கி நாம் அறிந்து கொண்டிருந்தால், நம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்று தான் கறிவேப்பிலை. காலங்காலமாக பெரும்பாலான தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை தினசரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் சமீபகாலமாக வட இந்தியாவிலும் கறிவேப்பிலை முன்பை விட பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமையல் பயன்பாடுகளை தவிர கறிவேப்பிலை சில ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சிமற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இந்த இயற்கையான இலையில் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலைகள் செரிமானத்திற்கு உதவுகிறது, கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை நம் உடலுக்கு அளிக்கிறது.
கறிவேப்பிலையை எந்த உணவு வகையிலும் பயன்படுத்தலாம் என்பதோடு இதனை தண்ணீரில் நன்கு அலசிவிட்டு அப்படியே நேரடியாக மென்றும் சாப்பிடலாம். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடலாம். அதே போல கறிவேப்பிலையை எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து காலை மாலை உபயோகிக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு... கறிவேப்பிலை ஆன்டிஆக்ஸிடன்ஸ் மற்றும் கால்சியம் நிறைந்த இயற்கை மூலிகை ஆகும்.கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு பொதுவாக முதல் 3 மாதங்களில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற மார்னிங் சிக்னஸிலிருந்து விடுபட கறிவேப்பிலை உதவுகிறது.
நீரிழிவு நிலையைகட்டுப்படுத்த உதவும் கறிவேப்பிலை: உடலில் இன்சுலின் செயல்பாட்டில் நேற்மறை தாக்கத்தை ஏற்படுத்தி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கறிவேப்பிலை உதவுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கறிவேப்பிலையை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், இதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். நீரிழிவு நோயாளிகளும் தயக்கமியன்றி தங்கள் உணவில் கறிவேப்பிலை சேர்த்து கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.