என்ன நடக்கிறது? - அடுத்தடுத்து விலகும் பொறுப்பாளர்கள்? நாம் தமிழர் கட்சி

என்ன நடக்கிறது? - அடுத்தடுத்து விலகும் பொறுப்பாளர்கள்? நாம் தமிழர் கட்சி
By: No Source Posted On: October 03, 2024 View: 24672

என்ன நடக்கிறது? - அடுத்தடுத்து விலகும் பொறுப்பாளர்கள்? நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நாம்கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினார்.

 

இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக சுகுமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்.

 

2015 இல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 தொகுதி செயலாளர் ஆகவும் 2020 இல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம்.

 

இரண்டு பாராளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம். கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.


இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

 

அண்ணன் கூறியது : இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

 

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை.

எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன்.

 

இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... என தெரிவித்துள்ளார்.

Tags:
#நாம் தமிழர் கட்சி  # சீமான்  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos