தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கை..!

தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கை..!
By: punnagainews Posted On: April 21, 2025 View: 5343

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கை..!

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
மழை நிலவரம்:
தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோவில்பட்டி (தூத்துக்குடி) 3, இளையாங்குடி (சிவகங்கை) 2, கமுதி ARG (ராமநாதபுரம்) 1.

வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலை :- வேலூர் : 40.2° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி : 23.0° செல்சியஸ்

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ்  உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. 

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ்  இயல்பை  விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37–40° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 34–36° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35–38° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21–28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
• தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

21-04-2025 மற்றும் 22-04-2025: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

23-04-2025 முதல் 27-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (21-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (22-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்:
21-04-2025 முதல் 25-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos