
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? மீறி சாப்பிட்டால் என்ன ஆகும்? வாங்க பார்க்கலாம்..!
எலுமிச்சை (Lemon) பழங்களில் பல நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை பழத்தில் இயற்கையான விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் விட்டமின் C (Vitamin C) ஆகியவை சருமம் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், முகப்பரு, கரும்புள்ளிகள், தடித்த தோல் போன்றவற்றை தடுக்கும். எலுமிச்சை நீரில் கொஞ்சம் தேன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது
இப்படி பல நன்மைகள் இருந்தாலும் எலும்பிச்சை சாப்பிடுவதால் சில பிரச்னைகளும் இருக்கின்றன. எலும்பிச்சை போன்ற சில சிட்ரஸ் பழங்களில் உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு மைக்ரேன் எனப்படும் தலைவலியை ஏற்படுத்தக்கூடியவை. அதனால், எலுமிச்சை சாற்றை குறைந்த அளவில் மட்டுமே பருக வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தொண்டையில் உலர்ச்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.
எனவே, சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வது தலைவலி, மைக்ரேன் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எலுமிச்சை என்பது விட்டமின் C-க்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். ஆனால், சில நோய்கள் உள்ளவர்கள் எலுமிச்சையை சாப்பிடக் கூடாது. அதிக அளவிலான விட்டமின் C, இரத்தத்தில் இரும்புச் சத்து அளவை அதிகரிக்கும். சில சந்தர்ப்பங்களில், இது உடலின் உள் உறுப்புகளை பாதிக்கக்கூடும்.
எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதனால் அதிகமாக எடுத்துக்கொண்டால் பற்கள் மீது உள்ள இமாமெல் மெலிதாகி பற்கள் பலவீனமாகலாம். அதனால், எலுமிச்சையை அளவோடு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
எலுமிச்சை சாறு அமிலத்தன்மையுடன் இருப்பதால் சிலருக்கு அடிவயிறு வலி, பித்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் எலுமிச்சையை தவிர்க்க வேண்டும். மேலும் இது சிறுநீரை அதிகம் வெளியேற்றும் தன்மை கொண்டதால், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனை அடிக்கடி எடுத்துக்கொண்டால் உடலில் எலக்ட்ரொலைட் சமநிலையை பாதிக்கக்கூடும்.
டான்சில்ஸ் (Tonsillitis) பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சையை தவிர்க்க வேண்டும். இது தொண்டை வலியை மேலும் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு எலுமிச்சை அல்லது சிட்ரஸ் பழங்கள் மேல் அலர்ஜி இருக்கும். எனவே அவர்கள் தவிர்ப்பது நல்லது.
எலுமிச்சையை நன்மைகளுக்காக உட்கொள்வது சரி. ஆனால், எந்த ஒரு உணவாக இருந்தாலும், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே நிபுணர்கள் கூறும் முக்கியமான எச்சரிக்கை.