
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 57 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற்றவர்கள். 17 பேர் நான் முதல்வன் உறைவிட பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றவர்கள்.
முதல் நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.7000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
முதன்மை தேர்வுக்கு தயாராவோருக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது” என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.