
திருச்செந்தூர் கோயில் கடலில் நடந்த அதிசயம்..!
திருச்செந்தூர் கடலில் நேற்று தமிழ் புத்தாண்டு ஓட்டி கூட்டம் அலைமோதியது . கடந்த 12 ம் தேதி முழுவதும் பௌர்ணமி இருந்து வந்த நிலையில் அப்பொழுது இருந்து கடல் நீர் உள்வாங்கி இருந்தது .
பிறகு நேற்று காலையில் மீண்டும் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கடல் நீரானது சுமார் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.. இப்படிப்பட்ட சூழலில் ஆச்சரிய சம்பவம் ஒன்று திருச்செந்தூரில் நடந்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.. உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோயிலில் விசேஷ, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மற்ற நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்று செல்வார்கள்.
அப்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள கடற்கரையில் புனித நீராடிய பிறகு முருகனை வழிபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டு என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள்..
தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, பௌர்ணமி நாளை முன்னிட்டு திருச்செந்தூர் கடலானது அதிகளவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.. வழக்கமாக பௌர்ணமி நாளில், கடலில் சீற்றங்கள் இருக்கும் என்றாலும், இதற்கு முன்பு எந்த பௌர்ணமி நாளிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை, கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வருகின்றன.
அந்தவகையில், தற்போது கடலிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை கடல் நீரானது வேகமாக கடல் அலைகளுடன் வெளியே தள்ளுகிறது.. திடீரென கடல் அலைகள் கொந்தளித்துக்கொண்டு, கரையை தாண்டி வந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தனர்.. அதிகப்படியான கடல் நீர் கரையை தாண்டி வேகமாக வெளியேறிவிட்டதால, கடற்கரையோரம் வியாபாரம் செய்ய வைத்திருந்த கடைகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்துவிட்டது.
இந்த கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் பக்தர்கள், வழக்கம்போல கடலில் புனித நீராடி உற்சாகத்துடன் சாமியை தரிசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் மற்றொரு பரபரப்பு சம்பவம் திருச்செந்தூர் கடலில் நடந்துவிட்டது..
நேற்று புத்தாண்டு என்பதால், பல பக்தர்கள் கடலில் நீராடினார்கள்.. அப்போது சேலத்தை சேர்ந்த சந்திரன் என்ற பக்தரும் சாமி தரிசனத்துக்கு பிறகு கடலில் நீராட வந்தார்.. சந்திரனுக்கு 55 வயதாகிறது.. குளித்து கொண்டிருந்த சந்திரன், திடீரென கடலில் மூழ்கினார். இதைப்பார்த்து அவரது உறவினர்கள், சக பக்தர்கள் அலறி கூச்சலிட்டார்கள்.. சந்திரனை பதற்றத்துடன் தேடினார்கள்.. அரை மணி நேரத்திற்கும் மேலாக கடலில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை...
பிறகு, கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், சிப்பி சேகரிக்கும் தொழிலாளர்கள் கடலுக்குள் இறங்கி தேடினார்கள்.. பிறகு ஒருவழியாக சந்திரனை கண்டுபிடித்தனர். அதிகமாக தண்ணீர் குடித்த நிலையில், சந்திரன் பேச்சு, மூச்சின்றி மீட்கப்பட்டார்... கடலிலிருந்து வெளியே கொண்டு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், சந்திரனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவர் கண்விழிக்கவில்லை.. நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால், சந்திரன் இறந்து விட்டதாகவே நினைத்தார்கள்..
எனவே, அவரை, ஸ்ட்ரெச்சரில் வைத்து கோவில் முன்பு தூக்கி சென்றனர்.. அப்போது திடீரென கண் விழித்து எழுந்தார் சந்திரன்.. இறந்துவிட்டதாக கருதியவர், திடீரென எழுந்ததை பார்த்ததுமே, அங்கிருந்த பக்தர்கள், பக்தி பெருக்கால், முருகா... முருகா என்று உணர்ச்சிப்பெருக்கில் கோஷமிட்டனர். அதிகளவு தண்ணீரை குடித்ததால் சந்திரன் மயங்கியதாக தெரிகிறது..
பிறகு, கோவில் ஆம்புலன்சில், திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரனை, உடனடியாக ஐசியூ-வில் சேர்த்தனர்.. மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறக, இயல்பு நிலைமைக்கு சந்திரன் திரும்பியிருக்கிறார்.. இதனிடையே, சந்திரனை சரியான நேரத்தில் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.. முருகனின் அருளால் சந்திரன் பிழைத்ததாக, உறவினர்களும் கண்ணீர் பெருக்குடன் மனமுருகி சொல்கிறார்கள்.