
அடேங்கப்பா..! பெரிய முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி..! நிர்மலா சீதாராமன் தாராள மனசு..!
கடன்கள் அளிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் முடிந்தும் அந்த கடன்கள் திரும்ப வசூலிக்கப்படாவிட்டால் அவை வாராக்கடன்களாக கருதப்படும்.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கிகளின் வாரியங்கள் முடிவுப்படி, அந்த வாராக்கடன்கள், கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 10 நிதியாண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி வாராக்கடன், கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் தங்க நகை கடன், சொத்தின் பேரில் கடன்,வீட்டுக்கடன், கல்வி கடன், வாகன கடன், விவசாய கடன், தனிநபர் கடன், நம்பிக்கையின் அடிப்படையில் தரப்படும் வணிக கடன், வணிகத்தின் மதிப்பை நம்பிதரப்படும் கடன் என பல்வேறு வகையான கடன்கள் அதிக அளவில் தரப்படுகிறது.. அப்படி வழங்கப்படும் கடனை வசூலிக்க முடியாவிட்டால் அவற்றை வங்கிகளால் வசூலிக்க முடியாமல் போனால், அதை வாராக்கடனில் வரவு வைப்பார்கள்..
ஒருகட்டம் வரை அவை வாராக்கடனில் இருக்கும். அவர்களிடம் உள்ள சொத்துக்களை வைத்து கடனை மீட்க முயற்சிப்பார்கள். முடியாவிட்டால் கடன் தொகை கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படும். அப்படி கடந்த 10 ஆண்டுகளில் 16 லட்சம் கோடி வாராக்கடன் கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக மத்தியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கேள்விக்கு அண்மையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, வங்கிகளால் கடன்கள் அளிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் முடிந்தும் அந்த கடன்கள் திரும்ப வசூலிக்கப்படாவிட்டால் அவை வாராக்கடன்களாக கருதப்படும்.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கிகளின் வாரியங்கள் முடிவுப்படி, அந்த வாராக்கடன்கள், கணக்கு புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது வழக்கம்.
2022-2023 நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 324 கோடி, 2023-2024 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 270 கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டிருக்கிறது. கணக்கு புத்தகத்தில்இருந்து நீக்கப்பட்டதால், கடன்கள் தள்ளுபடி என்று அர்த்தம் அல்ல. எனவே, கடன் பெற்றவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. அவர்களிடம் வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க வங்கிகளுக்கு பல்வேறு வழிமுறைகளை தற்போது பின்பற்றிவருகின்றன. சிவில் கோர்ட்டுகளிலோ அல்லது கடன் மீட்பு தீர்ப்பாயத்திலோ வழக்கு தொடரலாம். திவால் சட்டப்படி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது வாராக்கடன் மதிப்பு குறித்து வெளியான தகவலின்படி, ரூ.14.56 லட்சம் வாராக்கடன் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.72 லட்சம் கோடி என்கிற அளவில் வங்கிகளில் வாராக்கடன் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. வாராக்கடனை வசூலிக்கும் முறையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் வாராக்கடனை குறைக்கும் வகையில் வங்கிகள் கடன் வழங்கும் முறையில் மாற்றங்கள் நடந்துள்ளாகவும் கூறப்படுகிறது.