
விஜய் மகன் திரைப்பட டீஸர் - இணையதளத்தில் வைரல்
சென்னை,
'கும்பலாங்கி நைட்ஸ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மேத்யூ தாமஸ்.
தமிழில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் விஜய்யின் மகனாக நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது இவர் மலையாளத்தில் 'லவ்லி' என்ற படத்தில் நடித்துள்ளார்.
திலீஷ் கருணாகரன் இயக்கியுள்ள இப்படம் 3டி முறையில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் ஒரு ஈ நடித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகளை கவரும் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகிறது.