BPCL ஆதரவில் விழுப்புரத்தில் வெள்ள நிவாரணப் பணிகள்.-----
புயல் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1000 குடும்பங்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) நிறுவனம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. பழனி அவர்களின் வழிகாட்டுதலில், விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த வெள்ள நிவாரண முகாம்களில், அரிசி, ரவை, சர்க்கரை, எண்ணெய், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ராமையன் பாளையம் காலனி, சகாதேவன் பேட்டை காலனி, அண்ணா நகர் - வார்டு 30, பனங்குப்பம் தோப்பு காலனி உள்ளிட்ட இடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் 5வது வார்டு கவுன்சிலர் திரு. நந்தா நெடுஞ்செழியன், 30 ஆவது வார்டு கவுன்சிலர் திரு சத்யவீரா, முன்னாள் கவுன்சிலர் திரு சிவசங்கர், திரு GR மோகன், திரு. பாலாஜி கலையரசன், திரு . பாலசந்தர் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
அன்பாலயா அறக்கட்டளை தலைமை அறங்காவலர் திருமதி ஷர்மிளா, அறங்காவலர் திரு. திருஞானம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.