மூட்டு வலி, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் - மூன்று நோய்களுக்கும் சித்தர்கள் அருளிய ஒரே மருந்து

மூட்டு வலி, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் - மூன்று நோய்களுக்கும் சித்தர்கள் அருளிய ஒரே மருந்து
By: No Source Posted On: November 04, 2024 View: 1038

மூட்டு வலி, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் - மூன்று நோய்களுக்கும் சித்தர்கள் அருளிய ஒரே மருந்து

பூண்டுப்பால்

தேவையான பொருட்கள்

 

உரித்த பூண்டிதழ் 6 பல்

பசும்பால் 100 மில்லி

தண்ணீர் 100 மில்லி

பனைவெல்லம் 5 கிராம்

 

செய்முறை

 

பசும்பால் தண்ணீர் இரண்டையும் ஒன்றாக கலந்து லேசான கொதி வரும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும்

 

அப்படி கொதிக்க வைத்த பாலினை இந்த பூண்டில் கொஞ்சம் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்

 

அதன் பின் அரைத்த இந்த விழுதை ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் பாலில் போட்டு நன்றாக மீண்டும் காய்ச்சி கொள்ளவேண்டும்

 

இந்தப் பால் பாதியாக சுண்டியதும் ஆற வைத்து பனைவெல்லம் சேர்த்து பருகலாம்

 

பூண்டு பாலின் பயன்கள்

 

உடலில் உள்ள அனைத்து வாய்வுகளும் நீங்கிவிடும்

 

செரிமானக் கோளாறுகள் நீங்கும். சர்க்கரை நோய் குறையும்

 

உடலில் சூடு குறையும். பித்தம் சமநிலைப்படும்

 

உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒரு அற்புதமான மருந்து

 

தொண்டை சளி நீங்கும், உடலிலுள்ள சீதளம் குணமாகும், சிலேத்தும குணம் சமநிலைப்படும்

 

வாதநோய்கள் நீங்கும், இதனால் மூட்டுவலி குணமாகும் என்று சித்தர்களே கூறியிருக்கின்றார்கள்

 

இந்தப் பூண்டுப் பாலினை பருகுவதால் வாதம் பித்தம் சிலேத்தும் எனும் முக்குணங்கள் சமமாகும் என சித்தர்களே கூறி இருப்பதால் உடலில் எந்த நோய்களும் அண்டாது இதனால் வேறு நோய்களும் உடலில் தோன்றாது என்பது உறுதி

Tags:
#பூண்டுப்பால்  # health tips  # Garlic 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos