உடைத்த கடலை பருப்பில் உள்ள சத்துக்கள்..!!

உடைத்த கடலை பருப்பில் உள்ள சத்துக்கள்..!!
By: No Source Posted On: October 26, 2024 View: 115

உடைத்த கடலை பருப்பில் உள்ள சத்துக்கள்..!!

உடைத்த கடலை பருப்பில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலேட் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்களும் உள்ளன. இதயம் ஆரோக்கியமாக இருக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்படும்

 

உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன . இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.

 

நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

 

உடைத்த கடலை பருப்பில் இருக்கும் புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நமது உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

 

புரத சத்து அதிகம் நிறைந்த உடைத்த கடலை பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு , ஆயுளை அதிகரிக்கிறது.

 

உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றவும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 

புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம்.

 

கடலை பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது .

Tags:
#உடைத்த கடலை 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos