உங்கள் வீட்டில் திடீரென நகம் கடிக்கிறார்களா? அப்படியென்றால் அதுதான் கன்பார்ம்!

உங்கள் வீட்டில் திடீரென நகம் கடிக்கிறார்களா? அப்படியென்றால் அதுதான் கன்பார்ம்!
By: No Source Posted On: October 23, 2024 View: 1321

உங்கள் வீட்டில் திடீரென நகம் கடிக்கிறார்களா? அப்படியென்றால் அதுதான் கன்பார்ம்!

யாராவது நகம் கடித்துக் கொண்டிருந்தால் வீட்டில் பெரியவர்கள் நம்மை திட்டுவார்கள். நகத்தை கடிக்காதே என்பார்கள். இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று நகத்தில் உள்ள அழுக்குகள் வாயின் உள்ளே செல்லும், அது போல் மற்றொரு காரணமும் உண்டு. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: தரித்திரம் நீங்க பரிகாரங்கள்! முதலில் தரித்திரம் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

தரித்திரம் என்பது நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டிய கஷ்ட காலத்தை குறிக்கிறது. ஒருவருடைய வாழ்வில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. வெறும் இன்பத்தையே தொடர்ந்து அனுபவிப்பவன் யாரும் இந்த உலகில் இருக்கவே முடியாது.

 

அவனுக்கும் தரித்திர காலம் என்று ஒன்று வரும். அந்த காலத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது தோல்வியில் தான் முடியும். சாதாரணமாக பேசினாலே பெரும் சர்ச்சையில் கொண்டு சென்று விடும். உங்களை மற்றவர்கள் கெட்டவனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.

 

குடும்பத்தில் சதா சண்டைகள் ஏற்படும். எவ்வளவு பொறுத்து கொண்டு போனாலும் பிரச்சனைகள் உங்களை தேடி வரும். தொழில், வியாபாரம் என்று எதிலும் நஷ்டம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் குறைவார்கள். மந்த நிலை உருவாகும்.

 

என்னடா இது சோதனை காலம்? என்ற எண்ணம் ஏற்படும். நல்லா தானே போயிட்டு இருந்தது? தீடீரென என்ன நேர்ந்தது? என்று புரியாமல் இருக்கும். ஆனால் உங்களுக்கே தெரியும். இனி எதை செய்தாலும் யோசித்து தான் செய்ய வேண்டும். எதிலும் நிதானம் நமக்கு தேவை என்று.

 

நீங்களே எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள். இதை தான் தரித்திரம் என்று கூறுகிறோம். இந்த தரித்திரம் ஏற்படும் காலத்தில் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களோ தரித்திரம் தரும் செயல்களை செய்வதை கண் கூடாக பார்க்க முடியும்.

 

உதாரணத்திற்கு நகம் கடிப்பது தரித்திரம் உண்டாக்கும். நகமே கடிக்காதவர்கள் கூட இந்த காலத்தில் நகம் கடித்து வீட்டிற்குள் துப்பி கொண்டிருப்பார்கள். அந்தி சாய்ந்த பொழுதில் வீட்டை பெருக்குவது, தலையை வாருவது போன்ற செயல்களில் ஈடுவார்கள். இதெல்லாம் தவிர்ப்பது நல்லது.

 

தரித்திரம் அனைத்தும் நீங்கி நல்ல அதிர்ஷ்டம் உண்டாக சக்தி வாய்ந்த இரண்டு அற்புதமான பரிகாரங்கள் உள்ளது.

 

தரித்திரம் நீங்க பரிகாரம்-1

வாழை மரம் அதிர்ஷ்டம் உண்டாக் கூடிய தெய்வீக மரமாகும். தோஷம் நீக்கும் பரிகார மரமாக விளங்கும் வாழை மரத்தின் அடிப்பகுதியில் கங்கைக்கு சமமான புனிதமான நீர் தேங்கி உள்ளது என்பது யாரும் அறியாத சூட்சம ரகசியமாக இருக்கிறது. இதை எப்படி எடுப்பது? என்ன செய்வது? என்று இப்பதிவில் இனி காண்போம் வாருங்கள்.

 

இந்த பரிகாரம் செய்வதற்கு கடல் நீர் கட்டாயம் வேண்டும். எனவே கடல் நீரை முன்னரே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.

 

ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் வேளையில் எழுந்து குளித்து விட்டு, உங்கள் வீட்டு வாழை மரத்திற்கு அருகில் செல்லுங்கள். வாழை மரத்தின் அடிப்பாகத்தில் இருக்கும் வேரிலிருந்து அரை அடி மேலுள்ள தண்டில் உடைந்த மூங்கில் கொம்பு கொண்டு குத்தினால் நீர் போன்ற ஒரு திரவம் வெளியேறும்.

 

இந்த திரவமானது கங்கை நீரின் புனிதத்தை ஒத்தது. இதனை ஒரு மண் சட்டியில் பிடித்து கொள்ளவும். இதனுடன் ஏற்கனவே சேகரித்த ஸ்ரீ விஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் வாசம் செய்யும் கடல் நீரினை கலந்து கொள்ளவும். இந்த புனித நீரை வீட்டின் மூலை முடுக்குகளில் தெளிக்கவும். பின்னர் வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் கொண்டு சென்று தெளிக்கவும்.

 

இவ்வாறு அவ்வப்போது தெளித்து கொண்டு வந்தால் எந்த விதமான தரித்திரமும் உங்களை விட்டு முழுமையாக நீங்கி விடும். மூதேவி சென்று ஸ்ரீ தேவி காலடி எடுத்து வைப்பாள். உங்களுக்கு நல்லதொரு அதிர்ஷ்டம் உண்டாகி வாழ்வில் ஏற்றம் காண்பீர்கள்.

 

தரித்திரம் நீங்க பரிகாரம்-2

எவர் ஒருவர் வீட்டில் தரித்திரம் பிடித்திருக்கிறதோ, வளர்பிறை பஞ்சமி திதியன்று, அதாவது நாள்காட்டியில் என்று பஞ்சமி திதி வருகிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தின் படி, தரித்திரம் பிடித்திருக்கும் நபர் தனது வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபங்களை ஏற்றி, பஞ்சமி தேவியை வழிபடவேண்டும். முடிந்தால் 5 அகல் விளக்குகளும் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

 

முடியாதவர்கள், நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றலாம். மாதம் ஒருமுறை வரும் வளர்பிறை பஞ்சமி திதி. அன்று, எவர் ஒருவர் வீட்டில் பஞ்சமி தேவியை நினைத்து வழிபாடு செய்கிறாரோ, அவருடைய வீட்டில் தரித்திரம் தங்காது என்று சொல்கிறது சாஸ்திரம். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு விளக்குமாறு (ஒரு விளக்கமாறு அல்ல. 5 விளக்குமாறு வாங்கி கொடுக்க வேண்டும்.) வாங்கி தானமாகக் கொடுங்கள்.

 

அந்த விளக்குமாறை பயன்படுத்தி, அந்த கோயிலை சுத்தம் படுத்துவதன் மூலம், நம் வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உங்களது வீட்டில் பின் வாசல் இருப்பதாக இருந்தால், முன் வாசலில், வாசல் தெளித்துக் கோலம் போட்ட பின்பு, பின் வாசலிலும் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனென்றால், பின்வாசல் வழியே தான் மூதேவி உள்ளே வருவாள் என்பது ஐதீகம்.

 

பின் வாசல் வழியில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு இருந்தால் அந்த வாசல் வழியே மூதேவி உள்ளே வர மாட்டாள். எனவே கட்டாயம் தரித்திரம் உள்ளே வராது. பின்வாசல் இல்லை என்றால் பரவாயில்லை. முன் வாசலில், வாசல் தெளித்து கோலம் போட்டால் மட்டுமே போதுமானது.

 

அடுத்தவருக்கு நாம் உதவி செய்கின்றோம் இல்லையோ, நல்லது செய்கின்றோமோ இல்லையோ, முடிந்தவரை உபத்திரம் செய்பவர் ஆக இருக்கக் கூடாது. பிறருக்கு கெட்டது செய்யக்கூடாது என்பதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் உங்கள் பக்கம் தரித்திரம் வரவே வராது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos