சத்தியமங்கலம் வன பகுதியில் - கரும்பை தேடிய யானை
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடியில் கரும்பு லாரிகளை ஒற்றை யானை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.
தாளவாடியை அடுத்துள்ள கும்டாபுரம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையோரங்களில் முகாமிட்டு அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிச் செல்லும் கரும்பு லாரிகள் கும்டாபுரம் வனச் சாலையைக் கடந்து செல்ல வேண்டும். அப்போது லாரியில் இருந்து சிதறும் கரும்புத் துண்டுகளை உண்டு பழகிய யானை, அவ்வழியாக செல்லும் லாரிகளை மறித்து கரும்பு இருக்கிா என நோட்டமிடுவது தொடா்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து வந்த கரும்பு லாரியல வந்து கொண்டிருந்தது. இதைப் பாா்த்ததும் ஓடி வந்து ஒற்றை யானை, லாரியில் மூடப்பட்டிருந்த தாா்பாயை பிய்த்து வீசி கரும்பை பிடுங்க முயற்சித்தது. இதைப் பாா்த்ததும் அங்கிருந்தவா்கள் கூச்சலிட்டனா். தொடா்ந்து லாரியை ஓட்டுநா் இயக்கிச் சென்றால் லாரியை துரத்திக் கொண்டு பிளிறியபடி யானை ஓடியது.
Tags:
#ஈரோடு
# சத்தியமங்கலம்
# தாளவாடி
# யானை
#