கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட்டு?
மதுரை கே கே நகர் பகுதியில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் பாஜக எச் ராஜாவை கண்டித்து கோயிலை அரசு எடுக்கக் கோரி சட்ட அறிக்கை வெளியீட்டு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
சிதம்பரம் நடராஜர் கோவில் ஒரு பொதுக் கோவில், ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களுக்கு சொந்தமான கோவிலாக தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள ஹெச்.ராஜா நேரடியாக ஆதரவு தருகிறார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரவு தருகிறார் என நாங்கள் நேரடியாகவே குற்றச்சாட்டை வைக்கிறோம். தீட்சிதர்களுக்கு பாஜகவின் ஹெச்.ராஜா ராஜா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக உதவுகிறார்கள். தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கருவறையில் இல்லை. கோவிலில் தான். அங்கு விளையாடலாம் என ஹெச். ராஜா பேசுகிறார். இதிலிருந்து பாஜகவின் கோவில் குறித்த நிலைப்பாட்டை நன்கு தெரிந்து கொள்ளலாம்.
கோவிலின் 2000 ஏக்கர் நிலங்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விற்கப்பட்டுள்ளது. திமுக அரசும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். தமிழக அரசு சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என பேசினார்.
Tags:
#சிதம்பரம் நடராஜர் கோவிலில்
# தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட்டு
#