நவராத்திரி 9 ம் நாள் - வழிபடும் முறை!

நவராத்திரி 9 ம் நாள் - வழிபடும் முறை!
By: No Source Posted On: October 10, 2024 View: 1047

நவராத்திரி 9 ம் நாள் - வழிபடும் முறை!

நவராத்திரியின் நிறைவு நாளான ஒன்பதாவது நாள் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் எப்படி வழிபட வேண்டும், அம்பிகைக்கு என்ன பிரசாதம் படைத்து, எப்படி வழிபட்டால்அம்பிகையின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு நவராத்திரியின் ஒன்பதாவது நாளுக்குரிய சிறப்புகள் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

 

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதிக்கு வழிபாட்டு நாள் என்பதால் இது ஞானத்தை பெறுவதற்கான நாளாகவும், பராசக்தியின் முழு அருளையும் பெறுவதற்கான நாளாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த நாளில் கோவிலுக்கு சென்றோ, வீட்டிலோ அம்பிகையை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.

 

நவராத்திரி வழிபாடு :

நவராத்திரியின் ஒன்பாதாவது நாள் மற்றும் நிறைவு நாளை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டாலும் நவராத்திரி காலத்தில் வழக்கமாக செய்யும் வழிபாட்டினை கண்டிப்பாக செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளிலும் முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே நவராத்திரி வழிபாடும், விரதமும் முழுமை பெறும். பெரும்பாலானவர்கள் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதியை வழிபடுவதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு, நவராத்திரி தேவியர் வழிபாட்டினை செய்ய தவறி விடுவது உண்டு.

 

நவராத்திரி 9ம் நாள் சிறப்புகள் :

நவராத்திரியின் ஒன்பதாவது நாள், நவமி திதியில் கொண்டாடப்படுவதாகும். இதனை துர்கா நவமி என்றும் சொல்லுவதுண்டு. மற்ற மாதங்களில் வரும் நவமி திதி ராமர் வழிபாட்டிற்குரியதாகும். ஆனால் புரட்டாசி மாதத்தில் வரும் நவமி மிகவும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது நவராத்திரியின் நிறைவான இரவு என்பதால் இந்த நாளில் தெய்வீக சக்தி உச்சம் பெற்று இருக்கும். நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் பக்தர்கள் தொடர்ந்து விரதம் இருந்து, பக்தியுடன் வழிபட்டதற்கு பலன்களை தந்து. பக்தி உச்சநிலையை அடையும் திருநாளாகும்.

 

நவராத்திரி 9 ம் நாள் :

நவராத்திரியின் ஒன்பதாவது நாளாக வரும் நவமியில் கல்யா பூஜை, கர்பா மற்றும் டாண்டியா ராஸ் நடனம், துர்கா தேவியின் கோவிலுக்க சென்று விரதம் இருந்து வழிபடுவது. வாழ்க்கை செழிப்பாக அமைய வேண்டும் என இந்த நாளில் பக்தர்கள் வழிபடுவது உண்டு. பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுடன் நாடகங்கள் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாகவே மறுநாள் விஜயதசமி அன்று ராவண தஹன் எனப்படும் ராணவனின் உருவ பொம்மைகளை எரிக்கும் நிகழ்வு வட மாநிலங்களில் நடத்தப்படும்.

 

நவராத்திரி 9ம் நாள் வழிபாடு :

இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பதாவது நாள் அக்டோபர் 11ம் தேதி வருகிறது. இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபடுவது இவளின் மனதை மகிழ செய்யும் இந்த அம்பிகையை வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள்.

 

நவராத்திரி 9ம் நாள் வழிபாட்டு முறை :

அம்பிகை வடிவம் - பரமேஸ்வரி
கோலம் - தாமரை வகை கோலம்
மலர் - தாமரை
இலை - மரிக்கொழுந்து
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
சுண்டல் - கொண்டைக்கடலை
பழம் - நாவல் பழம்
நிறம் - வெந்தய நிறம்
ராகம் - வசந்தா

 

நவதுர்கை வழிபாடு 9ம் நாள் :

அம்பிகை வடிவம் - சித்திதாத்ரி
நைவேத்தியம் - பழங்கள், தேங்காய், அல்வா
மலர் - பாரிஜாதம்
பலன்கள் - ஆதி பராசக்தி என்று, நவதுர்கை என்றும், மகாதேவி என்றும் போற்றப்படும் இந்த தேவியை வழிபட்டால் அனைத்தும் சித்திக்கும். கையில் தாமரை, சங்கு, சுதர்சன சக்கரம் போன்றவைகளை வைத்திருக்கும் இவளை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். தெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

Tags:
#நவராத்திரி  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos