நவராத்திரி 2024 : வழிபாட்டு முறை, படைக்க வேண்டிய நைவேத்தியம்

நவராத்திரி 2024 : வழிபாட்டு முறை, படைக்க வேண்டிய நைவேத்தியம்
By: No Source Posted On: October 02, 2024 View: 1248

நவராத்திரி 2024 : வழிபாட்டு முறை, படைக்க வேண்டிய நைவேத்தியம்

நவராத்திரி வழிபாட்டினை எப்படி துவக்க வேண்டும், எந்த நாளில் பொம்மைகள் அடுக்க துவங்க வேண்டும், முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை வழிபட வேண்டும், எந்த நிறத்தில் உடை உடுத்தி, என்ன நைவேத்தியம் படைத்து, எப்படி வழிபட வேண்டும் என்ற விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 

நவராத்திரி 2024 :

நவராத்திரி என்பது அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாகும். இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 11ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை நாம் வழிபட வேண்டும், நவராத்திரி வழிபாடு தோன்றிய முறை, கொலு வைக்கும் முறை தோன்றிய வரலாறு, முதல் நாளில் அம்பிகையை எந்த நிறத்தில், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளில் வழிபடுவது சிறப்பு.

நவராத்திரியை கொண்டாடுவதற்கும், கொலு வைப்பதற்கும் இரண்டு விதமான கதைகள் புராணங்களில் சொல்லப்படுகிறது.

 

நவராத்திரி வரலாறு :

மகிஷன் என்ற எறுமை ரூபம் கொண்ட அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை, ஒன்பது நாட்கள் தவம் இருந்தாள். பல்வேறு சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற அந்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகைக்கு ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை அளிக்கிறார்கள்.

கடைசியாக அசுரனுடன் அம்பிகையை போரிட்டு, அவனை வதம் செய்கிறாள். அவள் வெற்றிக் கொண்ட பத்தாவது நாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம். இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது ராமாயணத்தில் ராமன், ராவணனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளில் வதம் செய்த நாளை தசரா பண்டிகையாக கொண்டாடுகிறோம்.

ராவண வதம் முடிந்து, மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் அமாவாசையில் ராமன் அயோத்திக்கு திரும்பியதாகவும், அன்று மக்கள் தீபம் ஏற்றி அவரை வரவேற்ற நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுவதாக சொலல்ப்படுகிறது.

 

நவராத்திரி கொலு வைக்க காரணம் :

முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்துள்ளான். அவன் காளி தேவியின் தீவிர பக்தன். ஒரு சமயம் அந்த மன்னன் நாடு, ராஜ்யம் என அனைத்தையும் இழந்து துன்பப்பட்டான். அப்போது மகாகாளியை வழிபட்டான். அப்போது மன்னன் முன் தோன்றிய காளி, இந்த நதிக்கரையில் இங்குள்ள மண் மற்றும் நீரை பயன்படுத்தி என்னை சிலையாக வடித்து ஒன்பது நாட்கள் வழிபடு என்றாள். அதன் படி மன்னனும் வழிபட்டான்.

பத்தாவது நாளில் காளி, நவ கன்னியர்களையும் அழைத்துக் கொண்டு மன்னனுக்கு துணையாக, எதிரிகளுடன் போர் செய்தாள். அந்த போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு இழந்த அனைத்தும் மீண்டும் கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்து மன்னன், தன்னை போலவே மண்ணால் அம்பிகையை சிலை செய்து வைத்து வழிபடும் மக்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டான்.

அப்படியே ஆகட்டும் என அம்பிகையும் வரமளித்தாள். இதன் அடையாளமாக தான் மண்ணால் செய்யப்பட்ட பொம்பைகளை கொலுவாக அடுக்கி வைத்து, வழிபடும் முறை ஏற்பட்டது.

 

நவராத்திரி முதல் நாள் வழிபாடு :

அக்டோபர் 02ம் தேதியை கொலு பொம்மைகள் அல்லது கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாட்டினை துவக்கி விடுவது தான் பெரும்பாலானவர்களின் வழக்கம். அன்றே அம்பிகைக்கு நைவேத்தியம் வைத்து வழிபட துவங்கி விட வேண்டும். அக்டோபர் 03ம் தேதி நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை சைலபுத்திரியாக வழிபட வேண்டும்.

இவளுக்குரிய நிறம் வெளிர் ஆரஞ்சு அல்லது பிங்க். ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் தாமரையும் ஏந்தி, ரிஷப வாகனத்தில் காட்சி தரும் இந்த அம்பிகைக்கு மஞ்சள் நிறத்தால் ஆன பொருட்களை படைத்து வழிபட வேண்டும்.

மஞ்சள் நிற ஆடையை நாம் உடுத்திக் கொண்டு, எலுமிச்சை சாதம், வெண் பொங்கல், மஞ்சள் நிற கேசரி நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். அதோடு கடலை பருப்பு சுண்டல் படைத்தும் வழிபடலாம்.

 

முதல் நாள் படிக்க வேண்டிய மந்திரம் :

நவராத்திரியின் முதல் நாளில் கொலு அல்லது கலசம் வைத்து என எப்படி வழழிபட்டாலும் மஞ்சள் நிற மலர்களால் அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், தேவி மகாத்மியம், லலிதா திரிசதி, ஷ்யாமள தண்டகம் உள்ளிட்ட ஸ்லோகங்களை படிப்பது மிக விசேஷமானதாகும்.

அபிராமி அந்தாதியை மொத்தமாக 100 பாடல்களையும் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் 10 பாடல்கள் என்ற விகிதத்திலும் படிக்கலாம்.

Tags:
#நவராத்திரி  # நவராத்திரி 2024  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos