கிட்னி செயலிழப்பு - ஆரம்பநிலை அறிகுறிகள்...
காரணங்கள் :
கண்ட்ரோலில் இல்லாத நீரிழிவு (சர்க்கரை நோய்) மற்றும் உயர் ரத்த அழுத்தம், HBP பிளட் பிரஸ்ஸர். மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்களே கடைகளில் வலி மாத்திரைகள் மருந்துகள் சாப்பிடுவது, தொடர் சிறுநீரக தொற்றுக்கள். சிறுநீரக நீர்க்கட்டி நோய். தொடர் சிறுநீரக கற்கள் பிரச்சினை போன்றவை.
அறிகுறிகள் :
1 சிறுநீரக நோயின் முதல் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக ஆழ்ந்த சோர்வு, பலஹீ னம், புத்திக் கூர்மை குறைதல் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரகங்கள் அவற்றின் அன்றாட வேலை செய்யும் திறனை நிறுத்தும் போது, உடலில் நச்சுகள் மற்றும் கழிவுகள் உருவாகும். இந்த அசுத்தங்கள் எளிதில் உடலை சோர்வடையச் செய்யும்.
2 தூங்குவதில் சிரமம் ஏற்படும். பல்வேறு தூக்கக் கோளாறுகளை அனுபவித்தல் .
3 சிறுநீரகத்தின் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) சேதமடைவதால், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
4 சிறுநீருடன் ரத்தம் கலந்து காணப்படும்.
5 வீங்கிய பாதங்கள் மற்றும் கணுக்கால்.
6 பசியின்மை, குமட்டல், வாந்தி உணர்வுகள்.
7 தோல் வறட்சி மற்றும் அரிப்பு.
8 சிறுநீரில் நுரை, குமிழிகள் காணப்படுதல்.
9 தசை சோர்வு, தசைப்பிடிப்பு.
10 கண்களின் கீழ் வீக்கம்.
11. அடிக்கடி முதுகுவலி.
சிறுநீரக நோய் கண்டறிய உதவும் பரிசோதனைகள்
ரத்தத்தில் யூரியா . கிரியாட்டினின் . பொட்டாசியம் . சோடியம் பை கார்பனேட். சோடியம் குளோரைடு டெஸ்ட்
12. eGFR மற்றும் cystatin C டெஸ்ட் இந்த இரண்டு டெஸ்ட் ம் செய்து பார்த்து கிட்னியின் செயல் திறனை அறிந்து கொள்ளலாம்
13. சிறுநீரில் micro albumin அளவுகளை பரிசோதித்து நோயின் தன்மையை அறியலாம்.
மருத்துவ ஆலோசனை பெற்று சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்குரிய காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.
உணவில் உப்பு குறைந்த அளவில் எடுக்க வேண்டும். உப்பில் ஊறவைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு எடுப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைபடி அளவுடன் சாப்பிட வேண்டும், அல்லது தவிர்க்க வேண்டும்.
Tags:
#கிட்னி
# Kidney
# Health tips