தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை! - அமைச்சர் ரகுபதி பேச்சு
சென்னை ஈ சி ஆர் நாவலூரில் உள்ள தனியார் ஓட்டலில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) - மருத்துவ மாணவர் கூட்டமைப்பு (IMA MSN TN) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை இணைந்து ஆசான் 24' - 3வது ஆண்டு மருத்துவ ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது.
தமிழ்நாட்டின் மருத்துவ ஆசிரியர்களின் பெரும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மொத்தம் 76 மருத்துவ ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.
அதனை தொடர்ந்து சட்டதுறை அமைச்சர் பேசுகையில், தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வு தேவையில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தற்போது நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மருத்துவர்களே கூறுக்கின்றனர். இதற்காக தான் தமிழக அரசு இதனை முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது விருது பெரும் பழம்பெரும் மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதி மருத்துவராக வில்லை. நீட் தேர்வால் ஏழை, எளிய மற்றும் கிராமபுற மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்பதால் தமிழக அரசு நீட் எதிர்ப்பில் உறுதியாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கிராமபுற மாணவர்கள் நகர்புறங்களில் கிடைக்கும் நீட் பயிற்சி பெற்றும் மருத்துவர் ஆவது என்பது கடினமானது. எனவே தான் கிராமங்களில் உள்ள பள்ளி படிப்பினை அடிப்படையாய் கொண்டு மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.
Tags:
#அமைச்சர் ரகுபதி
# நீட் தேர்வு
# தமிழக அரசு
#