சென்னையில் அவசியம் தரிசிக்க வேண்டிய 12 முருகன் கோவில்கள்
முருகப் பெருமான் பக்தர்கள் முருகன் கோவில்கள் எங்கெல்லாம் இருக்கிறது என தேடி தேடி சென்று வழிபடுவது வழக்கம். அப்படி சென்னையில் வசிக்கும் முருகன் பக்தர்கள், சக்தி வாய்ந்த முருகன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என விரும்புபவர்களுக்காக சென்னையில் அவசியம் ஒரு முறையாவது சென்று வணங்க வேண்டிய டாப் 12 முருகன் கோவில்கள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இங்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தாலே வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும் என சொல்லப்படுகிறது.
முருகப் பெருமானை வழிபடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டுகளில் முருகனின் கோவில்களையும், முருகனின் மந்திரங்கள், முருகன் பற்றிய பாடல்களையும் தேடி தேடி படிப்பவர்கள், தரிசிப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதற்கு காரணம் கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக கந்தக் கடவுள் விளங்குவது தான். இன்றும் பல பக்தர்களின் வாழ்க்கையில் முருகப் பெருமான் அதிசயங்கள் நிகழ்த்துவதும், தேடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்ப்பதும், பலருக்கும் கனவிலும் நினைவிலும் வந்து காட்சி கொடுக்கும் அற்புதங்கள் இன்றும் நடப்பதாகும்.
முருகப் பெருமான் என்றாலே ஆறுபடை வீடுகள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்த ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் பல சக்தி வாய்ந்த முருகன் கோவில்கள், பல பகுதிகளில் அமைந்துள்ளன. முருகனின் திருக்கரங்கள் 12. இந்த 12 திருக்கரங்களை போல் சென்னை மற்றும் அதற்கு மிக அருகில் அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த டாப் 12 முருகன் கோவில்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் தரிசிக்க வேண்டிய டாப் 12 முருகன் கோவில்கள் :
1. வடபழனி முருகன் கோவில் - வேண்டிய வரங்கள் கிடைக்கும்
2. ஆறுபடை முருகன் கோவில், பெசன்ட் நகர் - ஆறுபடை முருகனை ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
3. பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பொன்னேரி - தலையெழுத்தை மாற்றும் முருகன்.
4. பாலசுப்ரமணிய சுவாமி கோவில், சிறுவாபுரி - சொந்த வீடு அமையும்.
5. குமரன் குன்றம், குரோம்பேட்டை - சுவாமி மலைக்க இணையான கோவில்
6. கந்தசாமி கோவில், திருப்போரூர் - மகிழ்ச்சியான வாழ்க்கை தரும் முருகன்
7. பாலமுருகன் கோவில், சவீதா பல்கலைக்கழகம் - மனநிம்மதியும், வெற்றியும் தரும் முருகன்
8. சுப்ரமணியசாமி கோவில், குன்றத்தூர் - திருத்தணிக்கு இணையான தலம்
9. திருச்செந்தூர் முருகன் ஆலயம், நெசப்பாக்கம் - திருச்செந்தூருக்கு இணையான தலம்
10. கந்தக்கோட்டம் முருகன் கோவில் - முருகனே விரும்பி வந்து கோவில் கொண்ட தலம்
11. அச்சரப்பாக்கம் முருகன் கோவில் - பழனிக்கு இணையான தலம். 45 அடி முருகன் சிலை இருக்கும் கோவில்
12. வல்லக்கோட்டை முருகன் கோவில் - வந்தோரை வாழ வைக்கும் முருகன்
இந்த பன்னிரெண்டு முருகன் கோவில்கள் மட்டுமல்ல சென்னை நகருக்குள்ளாகவே, அதிகம் பிரபலம் ஆகாத, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோவில்கள் பல உள்ளன. வாய்ப்பு இருப்பவர்கள் இந்த தலங்களுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தால் வாழ்க்கையில் பல விதமான மாற்றங்களை காண முடியும். அதிலும் இந்த தலங்களுக்கு சென்று, முருகனை மனதார வேண்டிக் கொண்டு வேல்மாறல், சண்முக கவசத்தை முருகன் சன்னதி முன் அமர்ந்து படித்து விட்டு வாருங்கள். முருகன் நிகழ்த்தும் அற்புதங்களை காண முடியும் என இந்த தலங்களுக்கு செல்லும் முருகன் பக்தர்கள் கூறுகிறார்கள்.
Tags:
#முருகன் கோவில்கள்
# சென்னை
# சென்னை முருகன் கோவில்கள்
#