வாய்ப்புண் ஏற்பட காரணங்கள் மற்றும் குணம் பெற வழிகள்....!
உடலில் நீர் சத்துபற்றாக்குறையை வாய்ப்புண்ணுக்கு முக்கிய காரணம்
வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும்.
இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது
வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.
கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது.
கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
தேனில் புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும்.
சீரகத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி காலை மாலை இருவேளை தேனில் குலைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
வாயில் வாய் புண் இருக்கும் இடத்தில் நல்லெண்ணெய் தடவி வருவதாலும் குணம் கிடைக்கும்.
Tags:
#வாய்ப்புண்
# Mouth Ulcer