இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர் - 21-2024

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர் - 21-2024
By: No Source Posted On: September 21, 2024 View: 509

இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர் - 21-2024

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 05 ஆம் தேதி சனிக்கிழமை 21.09.2024

 

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

 

இன்று அதிகாலை 05.18 வரை திரிதியை. பின்னர் இரவு 11.42 வரை சதுர்த்தி. பின்பு பஞ்சமி.

இன்று 08.03 வரை அஸ்வினி. பின்னர் பரணி. உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷம்:
எவ்வளவுதான் திட்டமிட்டு நடந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவீர்கள். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவீர்கள். வியாபாரம் நீங்கள் நினைத்த மாதிரி நடக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அனுகூலம் பெற மாட்டீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பணத்தை இழக்காதீர்கள்.

 

ரிஷபம்:
நீங்கள் விருப்பப்பட்டு வாங்கிய தோப்பில் பராமரிப்புப் பணியை மேற்கொள்வீர்கள். விவசாய வேலைகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நம்பிக்கையான நபரிடம் பணத்தைக் கொடுத்து வைப்பீர்கள். காதலிக்கு கம்மல் வாங்கி பரிசளிப்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலில் வருமானம் பெருகி முன்னேற்றம் காண்பீர்கள்.

 

மிதுனம்:
பெண்ணின் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிடுவீர்கள். வீட்டில் பழுதான மின்சார உபகரணங்களை மாற்றுவீர்கள். குடும்பத்துடன் சென்று துணிமணிகள் கட்டில் மெத்தை வாங்குவீர்கள். பொறுமையாகப் பேசி தாய்மாமன் வீட்டில் இருந்த சிக்கலை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். வெளிநாட்டுக்குச் செல்ல விருக்கும் சகோதரருக்கு பண உதவி செய்வீர்கள்.

 

கடகம்:
அரசியல் தலைவர்கள் சிறப்பாக வேலை செய்து மக்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் தங்கள் தொழிலில் நேர்த்தியாக நடந்து கொள்வீர்கள். தடுமாறி விழுந்த மனைவிக்கு மாவு கட்டு போடுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்க கடையை அலங்கரிப்பீர்கள். கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள்.

 

சிம்மம்:
தொலைதூரப் பயணங்களில் தொல்லைகளை அனுபவிப்பீர்கள். ஒத்துழைப்பு தர மறுக்கும் ஊழியர்களால் உற்பத்தியில் பின்னடைவை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கருத்தை திணிக்க முயற்சி செய்யாதீர்கள். பிள்ளைகளால் மனக் கலக்கம் அடைவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்க தாமதமாவதால் ஏமாற்றம் அடைவீர்கள்.

 

கன்னி:
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக பழகினால் இழப்பை சந்திக்க மாட்டீர்கள். கேலி கிண்டல் செய்கிறோம் என்று அவமானப்பட்டு விடாதீர்கள். கூடிப் பேசி உங்களோடு வேலை பார்ப்பவர்கள் உங்களைக் கவிழ்க்க முயற்சி செய்வதை உணர்வீர்கள். எந்தக் காரணம் கொண்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள்.

 

துலாம்:
உங்கள் தொழிலுக்கு தேடி வந்து ஒரு நபர் உதவி செய்வார். நம்பிக்கையாக முதலீடு செய்து பக்கபலமாக இருப்பார். சிறப்பாக வியாபாரம் செய்து பொறுப்பாக பணம் சேர்ப்பீர்கள். எதிர்காலத்திற்காக திட்டம் போட்டு சேமிக்க நினைப்பீர்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார்கள்‌. கமிஷன் வியாபாரத்தில் முனைப்பு காட்டுவீர்கள். வழக்குகளை சாதகமாக முடிப்பீர்கள்.

 

விருச்சிகம்:
நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அபாரமான முன்னேற்றம் காண்பீர்கள். என்றோ வாங்கிப்போட்ட சொத்தின் மூலம் இன்று பெரிய வருமானம் பார்ப்பீர்கள். கடைகளில் செய்த முதலீடுகளால் கணிசமான லாபம் பெறுவீர்கள். பெரியோர்களின் நல்லாசியுடன் புதிய கிளைகள் திறப்பீர்கள். அரசு வேலையில் பாராட்டும் சிறப்பும் அடைவீர்கள்.

 

தனுசு:
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சிக்கல்கள் உண்டாகி சிரமப்படுவீர்கள். காதலியின் கோபத்தை தணிக்க பணிவாக பேசுவீர்கள். அவசரமான வேலையாக இருந்தாலும் நிதானமாகச் செய்வீர்கள். வேலை இடத்தில் எதிர்பாராத சின்ன விபத்து ஒன்றை சந்திப்பீர்கள். தகப்பனாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பேச்சுவார்த்தை முற்றி மன வேதனை அடைவீர்கள்.

 

மகரம்:
அடுத்தவர் பேச்சைக் கேட்டு தொழிலில் அகலக்கால் வைக்காதீர்கள். இரு மடங்கு பணம் தருகிறோம் என்று ஏமாற்றும் நபரிடம் எச்சரிக்கையாக ஒதுங்கி நில்லுங்கள். ஆன்லைன் சூதாட்டம் அடியோடு நாசமாக்கிவிடும். சுரண்டல் லாட்டரியில் மனம் சென்றால் பணம் பறந்து போகும். வியாபாரம் மந்தமாக நடக்கும். செலவுகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

 

கும்பம்:
நெருக்கமான நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பீர்கள். மாமனார் மாமியார் வகையில் இருந்து அவசர தேவைக்கு பணம் பெறுவீர்கள். கதை கவிதை கட்டுரை போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். நுணுக்கமான வேலைகளை திறமையாகச் செய்வீர்கள். அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிப்பாக்கிகளை ஒழுங்காகக் கட்டினால் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

 

மீனம்:
தொழிலுக்கு ஏற்படுகின்ற எதிர்ப்புகளை தைரியமாக நின்று தன்னம்பிக்கையுடன் முறியடிப்பீர்கள். தடம் மாறிச் சென்றவர்களை வீடு தேடி வரும்படி செய்வீர்கள். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்‌. குடும்பத்திலிருந்த பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் உரிய அனுகூலம் பெற தவற மாட்டீர்கள்.

Tags:
#இன்றைய ராசி பலன்கள்  # rasi palan  # today rasi palan  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos