துலீப் கோப்பை: இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவிப்பு!

துலீப் கோப்பை: இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவிப்பு!
By: No Source Posted On: September 14, 2024 View: 41

துலீப் கோப்பை: இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவிப்பு!

துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின.

 

டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

அதன்படி, இந்தியா சி அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயத்தால் வெளியேறினார்.

 

அடுத்து இறங்கிய ரஜத் படிதார் சாய் சுதர்சனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். படிதார் 40 ரன்னும், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

 

கடைசி கட்டத்தில் அணியில் இணைந்த இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் அரை சதமடித்து 78 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்க்கு 357 ரன்களை எடுத்திருந்தது.

 

இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. கெய்க்வாட், மனவ் சுதார் இருவரும் அரை சதம் கடந்தனர். கெய்க்வாட் 58 ரன்னும், மனவ் சுதார்82 ரன்னும் எடுத்தனர்.

 

இறுதியில், இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 

இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

 

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

 

இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

 

இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும். அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

 

இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 222 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Tags:
#Duleep Trophy  # India C  # India B  # துலீப் டிராபி  # இந்தியா சி  # இந்தியா பி  # india cricket  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos