இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-10-2024
குரோதி வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.09.2024
சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 07.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி . இன்று மாலை 05.13 வரை அனுஷம்.
பின்னர் கேட்டை. அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்:
தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா, இப்போது செய்யாதீர்கள். கையில் இருக்கும் பொருட்களை பத்திரப்படுத்த தவறாதீர்கள் . அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளவில்லை எனில் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடாதீர்கள். அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள். சந்திராஷ்டமம். கவனம் தேவை
ரிஷபம்:
வெளியூர்ப் பிரயாணங்கள் தொழிலுக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவீர்கள். இல்லத்தரசிகள் மூலமாக பணச்சுமையை குறைப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். அரசுப்பணியாளர்கள் ஊக்கத்தொகை பெறுவீர்கள்.
மிதுனம்:
புது நண்பர்களின் சேர்க்கையால் அதிக நன்மை அடைவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதால் பொருளாதார மேம்பாடு காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பை பேச்சுவார்த்தையின் மூலம் அகற்றுவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்:
தேவையில்லாத கற்பனையால் துன்பப்படுவீர்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். சோம்பேறித்தனத்தை விலக்கிவிட்டு சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். அரசு ஊழியர்கள் நேர்மையைக் கடைப்பிடித்து பாராட்டை பெறுவீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள்
சிம்மம்:
வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணத்தால் வியாபாரத்தை மாற்றி அமைப்பீர்கள். நிலத்தில் போட்ட முதலீடுகளால் வருமானத்தைப் பெருக்கி நிம்மதி அடைவீர்கள். வியூகம் அமைத்து தொழிலை நடத்துவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை சரிப்படுத்துவீர்கள். பங்குச்சந்தை பரிவர்த்தனை வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
கன்னி:
ஆசையுடன் கேட்ட ஆபரணத்தை வாங்கிக்கொடுத்து மனைவியை ஆனந்தத்தில் ஆழ்த்துவீர்கள். உறவினர்களின் ஒத்தாசையால் உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி பெறுவீர்கள். சகோதர உறவுகளில் இருந்த மனக்கசப்பை நீக்குவீர்கள். உங்களுக்கு எதிரான சிந்தனையில் இருந்தவர்களின் உதவியை பெறுவீர்கள்.
துலாம்:
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டை செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். ஐடி பணியாளர்கள் கடினமான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொறுப்பாக வேலை செய்து புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
நல்ல பாதையில் நடந்தாலும் பொல்லாத வம்பால் பொல்லாப்பு அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட மறக்காதீர்கள். வாகனங்களை நிறுத்தும் போது நன்றாகப் பூட்டி விட்டுச் செல்ல தவறாதீர்கள். அடுத்தவர் விஷயத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடாதீர்கள்.
தனுசு:
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். வேலையிடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். இடப்பிரச்சினையில் ஏற்பட்ட சச்சரவுக்காக காவல் நிலையம் செல்வீர்கள். வேலையில் அலட்சியமாக இருந்து அவஸ்தைப்படாதீர்கள். பைக் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விட்டு விபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
மகரம்:
முறைப்புடன் இருந்த கணவன் மனைவி உறவை இறுக்கமாக மாற்றுவீர்கள். பெரியோர்களின் நல்லாசியால் ஊக்கம் பெறுவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பீர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். சிறு தொழில் வியாபாரிகள் அதிக பலன் அடைவீர்கள்.
கும்பம்:
பொங்கிவரும் அருவிபோல் பொருள் வரவை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். குடும்பத்தில் இணக்கமாக இருந்து மனச்சங்கடத்தை மாற்றுவீர்கள். தனியார் துறையிலும் கணிசமான வருமானம் பெறுவீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் செல்வாக்கும் அடைவீர்கள்.
மீனம்:
விரோதிகளின் எதிர்ப்பால் விசனப்படுவீர்கள். விடாமுயற்சியால் அதை முறியடிப்பீர்கள். எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெறும் அலைச்சலை கொடுத்து சோர்வடைவீர்கள். அநாவசியமாக யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அதனால் பகையை சம்பாதிப்பீர்கள்.