வாட்ஸ்ஆப் அப்டேட்! 35 போன்களில் வேலை செய்யாதாம்!
ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், எல்.ஜி, லெனோவா, சோனி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 35 மாடல் போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்ஆப் செயல்படும் என்றும்,
அதன்பிறகு வேலை செய்யாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய மாடல் போன்களில் வாட்ஸ்ஆப் தனது சேவைகளை படிப்படியாக நிறுத்தி வருகிறது.
அந்த வகையில், 'ஐ.ஓ.எஸ்-12' அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஐபோன்கள் மற்றும் 'ஆன்ட்ராய்டு-5' அல்லது
அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஆன்ட்ராய்டு போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
#Whatsapp
# Stop Working
# Smartphones
# Android
# Apple