கால் ஆணிகள் அனைத்தும் மறைய...!

கால் ஆணிகள் அனைத்தும் மறைய...!
By: No Source Posted On: November 02, 2024 View: 1074

கால் ஆணிகள் அனைத்தும் மறைய...!

பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

 

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

 

அம்மான் பச்சரிசி செடியை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்ய வேண்டும். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்துவிடும்.

 

சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்க போகுவதற்கு முன்னாடி கால் ஆணி மேல் பூசி வந்தால்… மூன்று நாளில் குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்தில் புண் உண்டாகும். அப்படி வந்தால் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்தில் பூசிவிட்டால் புண் ஆறிவிடும். கால் ஆணியும் காணாமல் போய்விடும்.

 

சில பூண்டு பல்லுடன் மஞ்சள் சேர்த்து சாறு வரு வரை நசுக்கி, கால் ஆணி மீது வைக்கலாம். இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து, காலில் உள்ள ஆணி மீது தடவி வந்தால், கால் ஆணி குணமாகும். இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து, காலில் உள்ள ஆணி மீது தடவி வந்தால், கால் ஆணி குணமாகும்

Tags:
#கால் ஆணிகள்  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos