மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா..! அமெரிக்காவில் முழங்கிய ராகுல் காந்தி
மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா
---------
கூட்டாட்சி தத்துவம் பற்றி அமெரிக்காவில் முழங்கிய
அறிஞர் அண்ணாவின் பேரன் ராகுல் காந்தி...!
----------------
இங்கு நாம்
இந்திய தேசிய கீதத்துடன்
நிகழ்ச்சிகளைத் தொடங்கினோம்.
இந்தப் பாடல்
நமது தேசத்தின்
எல்லா மாநிலங்களையும் குறிப்பிடுகிறது.
அனைத்து மாநிலங்களையும்
சமமாக குறிப்பிடுகிறது.
ஒரு மாநிலம் சிறந்தது
மற்றொரு மாநிலம்
இரண்டாம் தரமானது என்று
இந்தப் பாடல்
பிரித்துப் பார்க்கவில்லை.
மாநிலங்களின்
கூட்டமைப்புதான் இந்தியா
என்று வர்ணிக்கிற
அழகான பாடல் இது.
இந்தியாவை,
மாநிலங்களின் கூட்டமைப்பு என்றே
அரசியல் சாசனமும் குறிப்பிடுகிறது.
எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலமும்
மற்ற மாநிலங்களை விட மேலானது அல்ல.
எந்த மதமும்
மற்ற மதங்களை விட மேலானது அல்ல.
எந்த மொழியும்
மற்ற மொழிகளை விட மேலானது அல்ல.
தலையில் தலைப்பாகை சூடி இருக்கும்
சீக்கிய சகோதரர்
பிற இந்தியர்களுக்குச் சமமானவர்.
அவர்
தலைப்பாகை சூடி இருப்பதால்
எங்களுக்குப் பிடிக்காதவர்
என்று நாம் சொல்ல முடியாது.
ஒருவர்
தமிழ் மொழி பேசுகிறார் என்பதால்
அவரை எங்களுக்குப் பிடிக்காது
என்று நாம் சொல்ல முடியாது.
ஒருவர்
இந்தி மொழி பேசுகிறார் என்பதால்
அவரை எங்களுக்குப் பிடிக்கும்
என்று நாம் சொல்ல முடியாது.
ஒருவர்
மலையாள மொழி பேசுகிறார் என்பதால்
அவரை எங்களுக்குப் பிடிக்காது
என்று நாம் சொல்ல முடியாது.
ஒருவர் தெலுங்கு
என்று சொன்னால்,
நாம் அவர் பேசும்
மொழியை மட்டும் குறிப்பிடவில்லை.
அவர்களின் வரலாறு, இசை,
நடனம், உணவு என
அனைத்தையும் உள்ளடக்கிய
தேசிய இனத்தை
நாம் அர்த்தப்படுத்துகிறோம்.
தெலுங்கு மொழி
இந்தியைப்போல் முக்கியமானது அல்ல
என்று நீங்கள் சொன்னால்
நீங்கள் ஆந்திர மக்களை
இழிவுபடுத்துகிறீர்கள்.
இந்தி பேசாத மக்களிடம்,
உங்கள் வரலாறு முக்கியமல்ல,
உங்கள் பாரம்பரியம் முக்கியமல்ல,
உங்கள் முன்னோர்கள் முக்கியமல்ல
என்று ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது.
இந்த ஒற்றைக் கோட்பாட்டுக்கு
எதிராகத்தான்
இந்தியாவில் நாம் போராடி வருகிறோம்.
இந்தியா என்பது
ஒற்றை சித்தாந்தம்
என்று ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது.
இந்தியா என்பது
பன்மைத்துவம் கொண்டது
என்று நாம் சொல்கிறோம்.
சாதி, மொழி, மதம் கடந்து,
எல்லா தரப்பினருக்கும்
இங்கே பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.
எல்லா தரப்பின்
பாரம்பரியமும், வரலாறும்
மதிக்கப்பட வேண்டும்.
இதுவே நமது
நியாயமான போராட்டம்.
- அமெரிக்காவில் முழங்கிய ராகுல் காந்தி