ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பி.எட். கல்லூரிகளுக்கு - எச்சரிக்கை!
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
* வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என புகார் வந்துள்ளது.
* வெளி மாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையம் வாயிலாக தேர்வே எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* வகுப்புக்கு வராதோரை தேர்வெழுத வைத்தால் பி.எட். கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
* வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை
எடுக்கப்படும்.
* குளோபல் அகாடமி என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.