
இந்தி திணிக்கப்பட்டால் ஏற்க மாட்டோம் - Same side goal போட்ட தமிழிசை
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது...
புதிய கல்விக் கொள்கையை குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படவில்லை. ஒருவேளை இந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும்,
நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை குறித்து, திமுக எம்பி கனிமொழி தவறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒரு தமிழர் மத்திய அரசின் நிதி அமைச்சராக செயல்படுவதே மிகப்பெரிய பெருமை. தமிழ் மொழிக்கா நாங்களும் தான் போராடினோம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைப்பால் உயர்ந்தவர்.
குடும்ப அரசியலில் ஆட்சிக்கு வந்து துணை முதலமைச்சராக ஆனவர் அல்ல.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது உண்மையே ஆகும்.
பாஜக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் வரை சென்று தான் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்றார்.