
கேரட் துருவல் எண்ணெய்! முகத்தில் தேய்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
இந்த எண்ணெய் குறித்து பேசும் மருத்துவர்கள்,
கேரட் மற்றும் தேங்காய் எண்ணெயில் மட்டும்தான் ஆண்டி ஏஜிங் தன்மைகள் உள்ளது என்பது இல்லை
என்று கூற்கின்றனர். கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துகள்
அதிகமாக இருப்பதாக கூறும் அவர்கள், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளில்
இந்த சத்துகள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆல்மண்ட் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கொஞ்சம் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ
கேப்ஸ்யூல் சேர்த்து, தீயை சிரிதாக வைத்து கேரட் சேர்த்து கொதிக்க வைத்து, அதை ஆற வைத்து
பின்பு, அதை ஒரு மஸ்லின் துணியில் போட்டு வடிக்கட்டி உபயோகிக்கலாம்.
பொருட்களால் சருமம் பொலிவாகலாம் எனக்கூறும் மருத்துவர்கள், இதனால் மட்டும்தான் சருமம் மினுமினுக்கும் என்ற கட்டாயம் இல்லை, எனக்கூறுகின்றனர்.
நம் சருமம் பொலிவிழப்பதற்கு நாம் மட்டும் காரணம் இல்லை. நம்மை சுற்றி இருக்கும் மாசு, மன அழுத்தம் போன்றவையும் பெரிய காரணங்களாக அமைகின்றன. இதனால், சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்ஸும் உற்பத்தி ஆகலாம் என்றும் கூறுகின்றனர்.