ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம் தேதியை அறிவித்தது தமிழக அரசு ..!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம் தேதியை அறிவித்தது தமிழக அரசு ..!
By: punnagainews Posted On: March 20, 2025 View: 2830

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம் தேதியை அறிவித்தது தமிழக அரசு ..!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-இன்படி, முதலமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் 29.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் IV-A–இல் உள்ள பிரிவுக் கூறு 15A(11)–இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos