
சென்னையில் தூத்துக்குடி ரவுடியை சுற்றி வளைத்து சுட்டு பிடித்த போலீசார்..!
தூத்துக்குடி ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னையில் சுட்டுப் பிடித்த போலீஸ்
சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் போலீசார் நடத்திய சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த சில ரவுகள் கைது செய்யப்பட்டனர்.
அந்த ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவும் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த கூலிப்படை கும்பலின் தலைவருமான ஹைகோர்ட் மகாராஜாவை அவரது காலில் போலீஸார் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே தனிப்படை போலீஸார் ரவுடியின் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். தற்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்தோடும் தூத்துக்குடி ரவுடி கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.