இன்றைய ராசி பலன்கள் - செப்டம்பர்-03-2024
குரோதி வருடம் ஆவணி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 03.09.2024
சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 07.59 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.
இன்று அதிகாலை 01.50 வரை மகம். பின்னர் பூரம்.
உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்:
ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் உள்ள உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிரடியான லாபம் பார்ப்பீர்கள்.
ரிஷபம்:
விவசாயத் தொழிலில் விறுவிறுப்பாக ஈடுபடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முனைப்புடன் இருப்பீர்கள். வியாபாரத்தில் பொருளாதாரம் முன்னேற்றத்தை பெறுவீர்கள். பண வரவில் தாராளமான நிலையை அடைவீர்கள். பணியிடத்தில் இருந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். விரும்பிய பெண்ணிடம் மனதை திறந்து காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள்.
மிதுனம்:
குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். வாக்கு வன்மையால் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். தாயாரின் ஆஸ்துமா நோய்க்கு ஹோமியோபதி வைத்தியம் பார்ப்பீர்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூரில் தங்குவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.
கடகம்:
போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் பொருள் நஷ்டம் அடைவீர்கள். பிள்ளைகள் செய்த பிரச்சனைக்காக ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்பீர்கள். கல்யாண காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். புதிய தொழிலுக்குத் தேவையான அரசு லைசென்ஸ் பெறுவீர்கள். ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். பொதுக் காரியங்களின் மூலம் புகழையும் செல்வாக்கையும் அதிகரிப்பீர்கள்.
சிம்மம்:
எடுத்த காரியம் முடிவுக்கு வராமல் ஏமாற்றம் அடைவீர்கள். வீட்டில் கிறுக்குத்தனமாக நடந்து மனைவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். முதலீடுகளை அதிகரித்து போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். தொழிற்சாலையில் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த மரியாதை பெறுவீர்கள். ஆடம்பரமாக செலவு செய்து அவஸ்தைப்படுவீர்கள்.
கன்னி:
கடுமையாக உழைத்தாலும் உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். தொழில் உற்பத்தியில் முடக்க நிலையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் விபத்துகளில் சிக்குவீர்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிட்டு அவமானப்படுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள் செய்தால் சண்டை முற்றி நிம்மதியை இழப்பீர்கள்.
துலாம்:
ஆன்லைன் வர்த்தகங்களில் அமோகமான லாபத்தை பெறுவீர்கள். நல்ல காரியங்களுக்கு உதவி செய்வது சமுதாயத்தில் நன்மதிப்பை அடைவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள். மனைவியின் பிரியமான கவனிப்பால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
விருச்சிகம்:
உறவினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். நண்பர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேகமாக வளர்ச்சி காண்பீர்கள். எதிர்பாராத பண வரவால் முக்கிய கடன்களை அடைப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் அபாரமான முன்னேற்றம் பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு மரியாதை பெறுவீர்கள்.
தனுசு:
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். நிலப்பட்டா மாறுதல்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். காதலிக்கு தேவையான நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆசையை சிரமப்பட்டு பூர்த்தி செய்வீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்து தொழிலை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மகரம்:
அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிகம் உறவாடாதீர்கள். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டாதீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள். உங்களின் வேலைக்கு உடனிருப்பவர்களே வேட்டு வைக்க நினைப்பார்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கை தேவை.
கும்பம்:
தாய்மாமன் வகையில் இருந்த விரிசலை சரி செய்வீர்கள். தடைப்பட்டு நின்ற திருமணப் பேச்சு வார்த்தைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சனைக்கு சாதகமான முடிவை காண்பீர்கள். மனைவி மக்கள் மிகுந்த அனுசரணையாக நடந்து கொள்வதால் நிம்மதி அடைவீர்கள். கழுத்து வலிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள்.
மீனம்:
ஆடல் பாடல் போன்ற பொழுது போக்கு அம்சங்களில் நாட்டம் கொள்வீர்கள். வியாபார எதிர்ப்புகளைத் தவிடு பொடியாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வீட்டிற்கு வாங்குவீர்கள். வாகனத் தவணையைக் கட்டி முடிப்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள். கடன் சுமையை குறைப்பீர்கள்.