
குழந்தைகளின் திடீர் வயிறு வலியை குணப்படுத்தும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்..!
குழந்தைகள் குறிப்பிட்ட வயதை அடையும் வரை அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி முழுமையடையாது, எனவே அவர்கள் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. சளி மற்றும் காய்ச்சலுக்குப் பிறகு குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடிய நோயென்றால் அது வயிற்று வலிதான். குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதென்பது அசாதாரண நிகழ்வல்ல. குழந்தைகளுக்கு வழக்கமாக வயிறு வலி கெட்டுப்போன உணவு, மன அழுத்தம், உணவுப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு வகையான காரணிகளால் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.சிலவற்றை வீட்டு வைத்தியங்களிலேயே குணப்படுத்தலாம். அப்படிப்பட்ட சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குழந்தைகள் நல மருத்துவர்.
தண்ணீர் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கான அடிப்படை விதியாகும். போதுமான தண்ணீர் குடிப்பது உடல் நீரேற்று மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்க உதவுகிறது.
இது பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். உங்கள் குழந்தைகள் செயற்கை பானங்கள், சோடா போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக முடிந்தளவு தண்ணீர் குடிக்க பழக்குங்கள், இது வயிற்றுவலியை குறைப்பதோடு செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யும்.
எளிதான உடற்பயிற்சிகள் பொதுவாக குழந்தைகள் வயிறுவலிக்கும் போது படுக்கையிலிருந்து எழ முடியவில்லை என்று கூறுவார்கள், ஆனால் அந்த சமயத்தில் அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பி உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள். மிதமான ஓட்டம், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது. இது செரிமான இயக்கத்தை சீராக்குகிறதுது.மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.
தயிர் அனைத்து விதமான வயிற்று வலிகளுக்கும் தயிர் சிறந்த மருந்தாக இருக்கும். இது வயிறை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, வயிற்றுப்போக்குக்கு எதிராக செயல்படுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் தொடர்ச்சியான வயிற்றுபோக்குகளை குணமாக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
இந்த பாக்டீரியாக்கள் செரிமான மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. காரமான உணவுகளைத் தவிர்த்தல் வயிற்று பிரச்சினைகள் இருக்கும்போது காரஉணவுகளை தவிர்ப்பது நல்லது. ஓட்ஸ், தயிர் போன்ற மென்மையான உணவுகளைச் சாப்பிடுவதால் குறைந்த எரிச்சல் ஏற்படுகிறது. காரம் இல்லாத உணவுகள் மசாலா நிறைய உள்ள உணவை விட எளிதாக செரிக்கப்படுகிறது. குறிப்பாக காரம் இல்லாத உணவுகள் செரிமானத்தை சீராக்குவதோடு வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதையும் குறைக்கிறது.
தண்ணீர் பாட்டிலில் கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரை ஊற்றிகொள்ளுங்கள். அதனை ஒரு துணியால் மூடி குழந்தைக்கு வயிறு பகுதியில் வலிக்கும் இடத்தில் வைக்கவும். இது உங்கள் குழந்தையின் வலியை உடனடியாக குறைக்கும். எவ்வளவு அதிக வெப்பம் தருகிறோமோ அந்த அளவு அது சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
இஞ்சி அனைத்து இந்திய சமயலறைகளிலும் இருக்கும் ஒரு அதிசய மருத்துவ பொருள்தான் இஞ்சி. இதில் இஞ்செர்ஜெஞ்சில் ஜிகலோல் உள்ளது, இது மிகவும் பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாகும், இது அசௌகரியம் மற்றும் குமட்டலைக் குறைக்கிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு குணங்களை கொண்டுள்ளது, இது வயிற்று அமிலங்களை நடுநிலையாக்குவதோடு, செரிமான பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகிறது.
செவ்வந்திப்பூ தேநீர் இதில் உள்ள வாசனை வயிற்று கோளாறுகளுக்கு உதவும் எதிர்ப்பு அழற்சி குணங்களை கொண்டுள்ளது. இது வயிற்றில் உள்ள சுருக்கங்களைத் தளர்த்தி மேல் செரிமான மண்டலத்தின் வயிற்று தசையை எளிதாக்குகிறது. இது வயிறு பிடிப்புகள் மற்றும் அடிவயிற்று அசௌகரியத்தை சரிசெய்கிறது.